மணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்

மணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வரும் அரசு கேபிள் டிவி துறையின் தலைவராக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருட்டிணன் சில நாட்களுக்கு முன் பணியமர்த்தப்பட்டார்.

இது குறித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் "உடுமலை ராதாகிருட்டிணன், அக்‌ஷயா என்ற பெயரில் தனியார் கேபிள் டிவி நிறுவனம் தனக்கு உரிமையாக நடத்தி வருகிறார். வில்லெட் என்ற செட்-ஆப்-பாக்ஸ் உதவியின் வழியாக 200,000 கேபிள் இணைப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். தன்னுடைய நிறுவனத்தின் கீழ் இருக்கும் 200,000 இணைப்புகளை அரசு கேபிள் இணைப்புகளாக மாற்றிவிட்டால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மற்றவர்களுக்கு முன் எடுத்துக்காட்டாக உடுமலை ராதாகிருட்டிணன் நடந்து கொள்ள வேண்டும். பின்பு மற்றவர்களை அரசு கேபிள் டிவிக்கு மாற்றக் கூறலாம்" என்றார்.

இந்த பேச்சு ஆளும் கட்சி தலைவர்களிடையே எதனாளோ எரிச்சலை ஏற்படுத்திவிட்டது.

உடனடியாக அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அமைச்சர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: