கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி அருகே உள்ள, கட்டக்கஞ்சம்பட்டி என்கிற ஊரில் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையால் அங்காள ஈஸ்வரி (35) என்ற பெண் பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்டார்.

கஞ்சம்பட்டியில் வாழ்ந்து வருபவர் திருமுருகன்.  இவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

திருமுருகன் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வாழ்பவர் அடைக்கலம் (36) . அருகில் உள்ள தனியார் பஞ்சாலையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.

திருமுருகன் மனைவி அங்காள பரமேஸ்வரி அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.  அடைக்கலத்திற்கும் பணம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்ற அடைக்கலம், பணத்தை திரும்ப தறுவதில் நாட்களை கடத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் பகை இருந்து வந்துள்ளது.

நிகழ்வு நடந்தேறிய அன்று, பணத்தை திரும்பப் பெறுவதற்காக ஈஸ்வர் அடைக்கலம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கே பணத்தை தராத அடைக்கலம், கண்மூடித்தனமாக ஈஸ்வரியை தாக்கியுள்ளார்.  இதில் ஈஸ்வரி நிலை குலைந்து நிகழ்விடத்திலேயே உயி இழந்துள்ளார்.

இதனை அறிந்த அடைக்கல, ஈஸ்வரியின் உடலை கமுக்கமாக அவரது வீட்டிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளார்.

னேரம் கடந்து வந்த ஈஸ்வரியின் கணவர், தனது மனைவி மூர்சையாகி இருப்பது கண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு ஈஸ்வரியை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்ததை அறிந்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர்.

விரைந்து வந்த காவல் துறையினர், அதை சந்தேக மரணம் என பதிவிட்டு, அக்கம் பக்கம் விணவினர்.

இதில், அடைக்கலத்தின் மீது சந்தேகம் திரும்பவே, அடைக்கலத்தை பிடித்து தம் பானியில் விணவினர்.

முதலில் முன் பின் முறனாக பதில் அளித்த அடைக்கலம் காவல் துறையினரின் கவணிப்பு தாளாது உண்மையை ஒப்புக்கொண்டார்.

அடைக்கலத்தை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: