மனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது

மனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது

பாகுபலி படத்தில் படைவீரனாக தோன்றிய மது பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு பாரதி என்ற பெண்ணை மணந்தார்.

பாரதியின் தந்தை கூறும் குற்றச்சாட்டின் படி, பிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும், அவ்வப்போது, பாரதியை பிரகாஷ் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பாரதி கடந்த செவ்வாய் கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்தவுடன் நாங்கள் அங்கு விரைந்துசென்று அவரது உடலை அடல் ஆய்விற்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்,

மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மது பிரகாஷை உடனடியாக காவல் துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர் தற்பொழுது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாகுபலி படத்தில் படைவீரனாக நடித்த மது பிரகாஷ் என்ற நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மது பிரகாஷ் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மது பிரகாஷின் மீது 304பி பிரிவின் படி (வரதட்சணைக் கொடுமையால் மரணம்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: