மெடுசா நச்சுயிரி - எவ்வாறு தன்மையை மாற்றி வந்திருக்கும்

மெடுசா நச்சுயிரி - எவ்வாறு தன்மையை மாற்றி வந்திருக்கும்
நுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும், மேலும் அவை எவ்வாறு தனது தன்மையை மாற்றி வந்திருக்கும் என்பது குறித்த ஆய்வு டோக்கியோ பல்கலை கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையோடோ பல்கலைகழகம், அறிவியலுக்கான டோக்கியோ பல்கலைகழகம், உடலியல் அறிவியல் தேசிய நிறுவனம் மற்றும் டோக்கியோ தொழில் நுட்ப கழகம் ஆகிய்வற்றின் அறிவியலாளர்களும் ஆராய்சியாளர்களும் ஒன்றினைந்து மெடுசா நச்சுயிரி குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த மெடுசா நச்சுயிரி தனது ஓம்புயிரியாக அகந்தமோபிபியா என்கிற அமீபா இனத்தை கொண்டுள்ளது.

மடுசா நச்சுயிரி தொற்று ஏற்பட்டவுடன், அமீபாவில் ஒரு கட்டி பை ஏற்படுகிறது.

இந்த கட்டி, நச்சுயிரி தொற்று ஏற்பட்டாலும் தான் வாழ்வதற்கு ஏதுவாக தன் அமைப்பை மாற்றிக் கொள்ளத்தக்க இயற்கை தூண்டுதலாகும்.

இதனால், தொற்று ஏற்பட்ட அமீபா, கடினமான மேல்பரப்பு கொண்டதாக இருக்கிறது.

மெடுசா நச்சுயிரியின் சிறப்பு என்னவென்றால் அது பெரிதாக இருப்பது, அதற்கு உயிரியம் அற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) 5 இசுடோன் புரதங்களும் இருப்பதாகும்.

இசுடோன் என்பது, உயிரியம் அற்ற ரைபோ கரு அமிலத்தை சுருள் சுருளாகச் சுற்றி, நிறப்புரியாகக் கொண்டு வருவதற்கான, கட்டமைப்பு அலகுகளான நியூக்கிளியோசோம்களாக ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு புரதம் ஆகும்.

இத்தகைய அமைப்பு மற்ற எந்த பெரிய நச்சுயிரிகளிடமும் இல்லை.

இந்த சிறப்பு அமைப்பினால், மெடுசா நச்சுயிரி தனது உயிரியம் அற்ற ரைபோ கரு அமிலத்தை ஓம்புயிரின் உட்கருவில் படியெடுத்து அமீபாவின் உட்கரு முழுவதுமாக இந்த நச்சுயிரின் உயிரியம் அற்ற ரைபோ கரு அமிலம் நிரப்பப்படுகிறது.

அமீபாவின் புறவடிவமைப்பின் புரத மேல் பரப்பு, சுருள் சுருளான தடிப்புக்களை இந்த நச்சுயிரி தொற்றால் ஏற்படுத்துகிறது. இது பலவகை மேல்பரப்பு மரபணு குறியீடுகளை கொண்டுள்ளது.

இந்த ஆராய்சியானது, எவ்வாறு நச்சுயிரியின் மரபணு அமைப்பும், ஓம்புயிரியின் மரபணு அமைப்பும் ஒன்றுக்கொன்று இரண்டு புறங்களிலும் இடம் மாறிக்கொள்கிறது என்பதை விளக்குகிறது.

இந்த ஆய்வின் மூலம், மனிதனை நச்சுயிரி தாக்கும் பொழுது, மனிதனின் மரபணுக்களில் எத்தகைய தாக்கத்தை விட்டுச் செல்லும் என்பது குறித்த ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.

மேலும், நச்சுயிரிகள் எவ்வாறு தனது ஓம்புயிரியின் மரபணுக்களை பயன்படுத்தி தன்னை பிற ஓம்புயிரிக்களை தாக்கும் வன்னம் வடிவமைத்துக் கொள்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: