வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்

வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்
வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்

வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதற்கும், மருத்துவ மனைகளில் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்குமான வேறுபாடுகள் என்ன என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 35 குழந்தைகளின் பிறப்புகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

இந்த 35 பிள்ளை பெற்றெடுப்பும் இயற்கையாக மருத்துவச்சியின் உதவியுடன் தாயின் ஆவுடை (பெண் உறுப்பு) வழியாக மட்டும் குழந்தை வெளியில் வந்தது.

இதில் 14 குழந்தைகள் வீட்டிலும், 21 குழந்தைகள் மருத்துவமனைகளிலும் பிறந்தன. வீட்டில் பிறந்த பதி நான்கில், 4 மட்டும் நீரினுள் பிறந்தன.
நுண்ணுயிர்சூழகம்
மனிதனின் நுண்ணுயிர்சூழகம் பல கோடானு கோடி நுண்ணுயிர்களையும், பூஞ்சான்களையும், நச்சுயிரிகளை கொண்டதொரு அமைப்பாகும்.

இந்த உயிர்கள் அனைத்தும், மனித உடல் முழுவதும் அதன் அதன் இடத்தில் வாழ்கின்றன.

மனித தோல், வாய் என அனித்து துவாரங்களையும், இவையே பிற நோய் தொற்று ஏற்படாமல் பாது காத்து வருகின்றன.

மனித குடல் அமைப்பு, உணவை செரிக்கும் முறை என அனைத்திலும் இந்த உயிரிகளின் பங்கெடுப்பு இன்றியமையாதது.

இத்தகைய உயிர்கள் மனித உடலின் உள்ளும் வெளிப்புறத்திலும் சூழ்ந்து இருப்பதால் மனிதன் தோல் நோய்கள், உடல் குண்டாவது, நீரிழிவு, மூச்சு தொற்று மற்றும் குடல் தொடர்பான நோய்கள் என பலவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்கிறான்.

ரட்கார்ஸ் பல்கலைகழகம், நியூ யார்க் பல்கலைகழகம், சான் பிரான்சிச்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் மற்றும் தென் கொரியாவின் சீயோலின் சிசாங்க் பல்கலைகழகம் ஆகியவற்றின் மருத்துவ ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில், வீட்டில் பிறக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை விடவும் நல்ல நோய் எதிர்ப்பு திறனுடன் வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறப்புகளில், மருத்துவச்சி, குழந்தை மற்றும் தாய் என அனைவரும் ஒருவர் தோலுடன் மற்றவர் தோல் படும்படியாக எந்த வித பாதுகாப்பு உறைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகள் பிறந்து 30 நாட்களுக்கு கண்கானிக்கப்பட்டன.
வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்
இதில் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, நலம் தரும் பல்லாயிரம் வகை நுண்ணுயிரிகளும், பூஞ்சான்களும், நச்சுயிரிகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

அதே வேளையில், மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகள் நோய் எதிர்ப்பு வெளிப்படுத்தும் பல மர்பணு வேறுபாடுகளை கொண்டிருந்தனர்.

அதாவது, வீட்டில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே நோய் தற்காப்பு அமைப்பு பெற்றுள்ளதால் அவை நோய் தொற்றிற்கு உள்ளாகவில்லை எனவும், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் நோய் தாக்கும் கிருமிகளைன் தாக்கத்திற்கு உட்பட்டு இருப்பதும் தெளிவாகிறது.

இந்த வேறுபாடுகளுக்கான அடிப்படை அறிவியல் விளக்கம் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கவில்லை.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு அமிலக் கலவைகளாலும், அத்தகைய சூழல் அமைப்புகளை மருத்துவமனை பெற்றிருப்பதாலும் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம், குழந்தை பேறு மருத்துவமனைகள் வீட்டுச் சூழலுக்கு ஒத்தவாறு தம்மை மாற்றி அமைத்தால் பிறக்கும் குழந்தைகள் சிறப்பான உடல் நலத்துடன் வாழ்வார்கள் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: