பார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்

பார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்
பார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது என லண்டன் பல்கலை கழத்தை சார்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகைய சிறப்பு திறன், இசை வல்லுனர்களிடம் மேலோங்கி உள்ளதாகவும், பிறர் இத்தகைய திறன் இன்றி இருப்பது கண்டறீயப்பட்டுள்ளது.

இந்த திறனுக்கான அடிப்படை என்னவென்றால், பார்வை நாளங்களில் இருந்து செல்லும் குறிப்புகள் செவி நாளங்களுக்கும் அதன் குறிப்புகளை பகிர்வதாலேயே என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சிறப்பு திறன் சிலரிடம் இருப்பதாக பல ஆண்டுகளாக அறிவியல் வட்டாரத்தில் அறியப்பட்டாலும் அது குறித்த ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

இந்த திறனை, "பார்வையால் ஏற்படும் செவி ஒலி விளைவு" என கூறி வந்தனர்.

இந்த ஆய்வு மேற்கொள்வதற்கு முன், இந்த சிறப்பு திறன், ஏதோ மூளை தொடர்பான குறைபாடாக இருக்கும் என மருத்துவர்கள் என்னி வந்தனர். மேலும், இது, செவி தொடர்பான மூளை பகுதி, பார்வை தொடர்பான பகுதியை ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படுகிறது என நினைத்தனர்.

ஆனால், இந்த ஆய்வின் மூலம், மூளையின் பார்வை பகுதியும், செவி பகுதியும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இசை மீது பற்று, ஆர்வம், அது தொடர்பான வேலை ஆகியவற்றை கொண்டிருப்பவர்கள் இந்த திறனை பெரிதும் பெற்றுள்ளனர்.

ஆய்வில் பங்கு கொண்ட இசை வல்லுனர்கள், தங்களால் ஒளி மாறுபாடுகளுக்கு ஏற்ப ஒலியை உணர்வதாக சொன்னார்கள்.

இத்தைகைய சிறப்பு திறன் இவர்களுக்கு ஏற்படுவதற்க்கான அடிப்படை, இவர்கள் இசையை நடத்துனரின் சைகைகளுக்கு தக்கவாறு இசையை மீட்டு பழகுவதால் இருக்கும் என நம்பப்படுகிறது. அல்லது, பாடகர், பிற இசை மீட்டுபவர்களை கூர்ந்து கவணித்து தாங்களும் அதற்கு தக்கபடி இசையை ஆர்வமுடன் மீட்டுவதால் மூளையின் பார்வை அமைப்பும், செவி அமைப்பும் ஒன்றுக்கொன்று ஒத்து செயல்பட துவங்கி இவ்வாறான ஒளி வேறுபாடுகளை ஒலியாக உணரும் தன்மை ஏற்படுவதாக அறிவியலாளர்கள் என்னுகின்றனர்.
ஆய்வு
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய மனோவியல் வல்லுனர் முனைவர் எல்லியோட் ஃப்ரீமன் கூறும்போது "சிலருக்கு மனிதர்களின் அசைவு, கடைகை பெயர் பலகைகளில் உள்ள விளக்கு ஒளி வேறுபாடுகள், வண்டிகளின் குறியீடு விளக்குகள் என அனைத்தின் ஒளி வேறுபாடுகளும் ஒலியாக கேட்கும்".

இந்த பார்வை செவித்திறன் கொண்டவர்கள், ஒளி மற்றும் ஒலி ஆகிய இரண்டையும் ஒலியாக கேட்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு பார்வை செவித்திறன் ஒருவரிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களின் தலை மீது உணர்விகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் எவ்வாறு அவர்களின் மூளையானது ஒளி அமைப்பிற்கு தக்கவாறு பதில் தருகிறது என்பதை திறன் குறைந்த மின் அமைப்பின் மூலம் அளவீடு செய்தனர்.

இந்த ஆய்வில் நலமிக்க 36 பங்கெடுப்பாளர்கள் பங்கெடுத்தனர். இவர்களில் 16 பேர் இசை வல்லுனர்கள்.

அனைவரும், ஒரே மாதிரியான ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பார்வை செவித்திறன்
பார்வை செவித்திறன் கொண்டவர்களின் மூளை செவி அமைப்பானது, ஒளி அமைப்பிற்கு ஏற்றவாரு செவி பகுதியின் மூளை அலைகளின் வேறுபாடு இருந்தது.

மற்றவர்களுக்கு இத்தகைய வேறுபாடு இல்லை.

மேலும் இதே பங்கெடுப்பாளர்கள் குழுவை, அவர்கள் இந்த ஒளி வேறுபாட்டை ஒளி வேறுபாடு என்று உணராத நிலையில் எத்தகைய மூளை செவி பகுதியில் வேறுபாடு காட்டுகிறார்கள் என்று மற்றொரு ஆய்வு மேற்கொண்ட பொழுத்தும், பார்வை செவித்திறன் கொண்டவர்களின் மூளையானது பார்க்கும் ஒளி அமைப்பிற்கு தக்கவாறு செவி பகுதியில் வேறுபாடுகளை காட்டியது.

இத்தைகைய மூளை அமைப்பால் தான் என்னவோ சிலர் மட்டும் இசை வல்லுனர்களாக இருக்கிறார்கள்!!!
Share this Post:

தொடர்பான பதிவுகள்: