தேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்

தேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்
தேனீக்களின் கணித திறமை - தேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்

ஆராய்வாளர்கள் தேனீக்களுக்கு கணிதவியல் புரியமா என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டதில், அவைகளுக்கு வெற்று - "0" என்பதன் உட்பொருள் புரிகிறது என கண்டறிந்துள்ளனர்.

மேலும், தேனீக்களுக்கு கூட்டல் கழித்தல் தொடர்பான அடிப்படை கணிதம், நிறம் வேறுபாடுகளை வைத்து அவைகளால் மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

மிகச் சிறிய மூளையை கொண்ட தேனீக்களால் அடிப்படை கணிதம் மேற்கொள்ள முடிகிறது என்றால் அதன் மூளை அமைப்பை மேலும் ஆராய்ந்தால் அதன் மூலம் செயற்கை அறிவாற்றல் தொடர்பான அறிவியலில் நம்மால் மேலும் முன்னேர முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

மூளையின் அளவிற்கும், மூளையின் திறனிற்கும் தொடர்பில்லை என்பதை, மிக மிக சிறிய மூளை அளவை கொண்ட தேனீக்களால், அடிப்படை கணிதம் மேற்கொள்ள முடிகிறது என்பது விளக்குகிறது.
தேனீக்களின் கணித திறமை
பிரஞ்சு மற்று அவுத்ரேலியாவின் ஆராய்சியாளர்கள், தேனீக்களால் கணிதத்தின் அடிப்படையான கூட்டல் கழித்தல் கணக்குகளை மேற்கொள்ள முடிகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், தேனீக்களால் அடிப்படை கணிதம் மட்டும்மல்லாது, அவற்றால் வெற்று என்பதன் உட்பொருளும் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை கண்டறிந்தனர்.

இத்தகைய கணிதம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், மூளை அமைப்பில் எண்கள் குறித்த தெளிவு வேண்டும். மேலும் எண்கள் ஒவ்வொன்றின் மதிப்பு குறித்த நிலையான தெளிவு வேண்டும்.

மேலும், அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்த குறுகிய நேர நினைவு அமைப்பும் மூளையில் வேண்டும்.

இத்தினிக்கோண்டு மூளை உடைய தேனீக்களின் மூளையால் இந்த அளவிற்கு மூளையை செயல்பட வைக்க இயலும் என்றால், வரும் நாட்களின் செயற்கை அறிவாற்றல் தொடர்பான ஆய்வில் இந்த தேனீக்கள் எவ்வாறு தம் மூளை அமைப்பை பயன்படுத்துகிறது என்பது குறித்த தெளிவை பயன்படுத்திட வேண்டும்.

இந்த தேனீக்களின் கணித திறமை வெளிப்பாடானது, கணித கணக்குகளை மேற்கொண்டு விடை கண்டறிய பெரிய மூளை தேவை இல்லை என்பதை தெளிவாக்கி உள்ளது.

மேலும், தேனீக்களால் எளிதில் கற்றுக்கொள்ள இயல்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் தேனீக்கள்
தேனீக்களின் கணிதம் தொடர்பான ஆய்விற்காக Y என்ற அமைப்பு கொண்ட சிக்கலறையை வடிவமைத்தனர்.

அந்த அறைகளுக்குள் தேனீக்கள் சென்று வர தூண்டப்பட்டன.

சரியான அறையை தேனீ தேர்வு செய்தால் அதற்கு இனிப்பு பரிசாக கொடுக்கப்பட்டது.

அதே வேளையில் தவரான அறையை தேர்வு செய்தால் அதற்கு கசப்பு கொடுக்கப்பட்டது.

அதனால், தொடர்ந்து தேனீக்கள் இனிப்பு உள்ள அறையைக்கு சென்று வந்தன.

ஒரு தேனி சரியான அறையில் நுழையும் பொழுது ஒரே ஒழுங்குடன் கூடிய 5 வகை பொருட்கள் இருக்கும்.

இவ்வாறு அந்த பொருட்களில் நீலம் என்றால் கூட்ட வேண்டும் மஞ்சள் என்றால் கழிக்க வேண்டும் என்று பயிற்றுவிப்பதாக இருக்கும்.

கூட்டல் என்றால் அறையில் வலப்புறமும், கழித்தல் என்றால் அறையின் இடப்புறம் வழியாகவும் வெளி வரவேண்டும் என்று பயிற்சி அமைந்தது.

இதன் மூலம் +1 என்பதையும் -1 என்பதையும் தேனிக்கள் தங்களுக்கு தெரியும் என்பதை வெளிப்படுத்தின.

மேலும் இவ்வாறு கணிதம் மேற்கொள்கையில் வெற்று - 0 என்பதும் தமக்கு தெரியும் என்பதையும் வெளிப்படுத்தின.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: