பனி ஊழி ஏற்படப் போகிறது? அல்லது புவி வெப்பம்?

பனி ஊழி ஏற்படப் போகிறது? அல்லது புவி வெப்பம்?
பனி ஊழி ஏற்படப் போகிறது?

புவி வெப்பம் அடைகிறதா அல்லது தன்னை பனிக்கட்டியால் மூடுவதற்கு ஆயத்தமாகிறதா?

புவி வெப்பம் அடைவதாக அறிவியலாளர்களும் தன்னார்வ அமைப்புகளும், சில அரசுகளும் கூக்குரலிட்டு வரும் இந்த வேளையில், புவி தன்னை தானே பனிக் கட்டியாக மாற்ற முயன்று வருகிறது என்ற ஒரு அதிர்ச்சி செய்தியை ஒரு அறிவியலாளர் குழு வெளியுட்டுள்ளது.

மாசசூசெட்ஸ் தொழில் நுட்ப கழகம்

கடந்த 4500 லட்சம் ஆண்டுகளில் இதுவரை புவி தன்னை தானே மும் முறை பனி கட்டியாக மாற்றி அமைத்துள்ளது என மாசசூசெட்ஸ் தொழில் நுட்ப கழகம் சார்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகைய சூழலை பனி ஊழி (Ice Age) என அழைக்கின்றனர்.

இத்தகைய பனி ஊழி ஏற்படுவது எதனால் என்றால், காற்றில் உள்ள கரியமில வளிமம் திடீர் என புவியின் பிற வேதிப் பொருட்களுடன் வினை புறிந்து நீற்று போவதால், என கண்டறியப்பட்டுள்ளது.

எதனால்?

பனி ஊழி முன்பு ஏற்படுவத்தற்கு அடிப்படையாக இருந்தது வெப்ப மண்டல கண்டங்கள் இழுக்கப்பட்டு அவை நிலநடுக்கோடு பகுதியில் கண்டத் தட்டுக்கள் குவிவதால், ஆழ் கடல் பகுதியில் பாறைகள் வெளிப்படும்.

இவ்வாறு பாறைகள் வளிம மண்டலத்தில் வெளிப்படும் பொழுது, காற்றில் உள்ள கரியமில வளிமங்கள் பாறைகளில் உள்ள சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன் வினை புடிவதால், வளிம மண்டலத்தில் உள்ள கரியமில வளிமத்தின் அளவு முற்றிலும் குன்றிப்போகும்.

பனி ஊழி பனி ஊழி

காற்றில் கரியமில வளிமம் இருப்பதால் தான் புவி வெப்பம் நிலை நாட்டப்படுகிறது.

கரியமில வளிமம் இல்லாத நிலையில் குளிர் ஏற்படுகிறது.

இத்தகைய நிலை சில நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தான் ஏற்படும் என்றாலும், அது வளி மண்டலத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா கரியமில வளிமத்தையும் உறிஞ்சி விடுவதால் புவி முழுவதும் பனி ஊழி நிலைக்கு தள்ளப்படும்.

2016 மேற்கொண்ட ஆய்வு

2016 ஆம் ஆண்டு வாக்கில் இமயம் மலை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர் அறிவியலாளர் சாகுட் மற்றும் அவரது குழுவினர.

இமயமலையானது 800 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புவி கண்டத் தட்டுக்களின் நகர்வால் ஏற்பட்ட விளைவே இமயம் ஏற்பட அடிப்படை என கண்டறிந்துள்ளனர்.

இதை ஒரு கண்டத் தட்டுகளின் முடிப்பு என கூறுகின்றனர்.

இமயம் நோக்கிய புவி கண்டத் தட்டுக்கள் நகர்வு தீவிரம் அடைவதாகவும், அதனால், கடலுக்கு அடியில், நிலநடுக்கோடு பகுதியில் பாறைகள் வெளிப்பட்டு புவி குளிர்விப்பு தூண்டப்பட வாய்ப்புகள் உள்ளன என கணக்கிட்டுள்ளனர்.

கண்டத் தட்டுகளின் முடிப்புகள் ஆங்காங்கே தற்பொழுது ஏற்பட்டு வருவதால் புவி மனி ஊழிக்கு தள்ளப்படும் என நம்பப்படுகிறது.

கணிணி துனை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், ஒவ்வொறு முறை பனி ஊழி ஏற்படும் பொழுதும், கண்டத் தட்டுகளின் முடிப்பு சுமார் 10,000 கிலோ மீட்டர் நேளத்திற்கு பரவி இருந்துள்ளது.

தற்பொழுது இந்தோனேசியா பகுதியில் சுமார் 10,000 கிலோ மீட்டர் நேளத்திற்கு இத்தகைய முடிப்பு ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

சுண்ணாம்பு கலவை - Ophiolite

ஆழ் கடல் பகுதியில் சுண்ணாம்பு கலவை வெளிப்படுவதால் தான் புவி குளிர்விப்பு தூண்டப்படுகிறது.

அப்படியானால் முடிப்பு ஏற்படும் பகுதிகளில் அளவு கடந்து கிடைக்கும் அத்தகைய சுண்ணாம்பு கலவைகளை எடுத்து வந்து புவி முனைகளில் விட்டலாம் அல்லவா?

அப்படி விடுவதன் மூலம், தற்பொழுது புவி வெப்பம் அடையும் நிலையை கட்டுப்படுத்த இயலும் எனவும் அறிவியலாளர்கள் அதற்கான ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: