கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்? நலனை காக்க!

கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்? நலனை காக்க!
கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்?

கருவுறுதல் என்பது பெண்மையின் மேலான நிலை.

கருவுற்ற பெண்களை புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் கூடுதல் கவணிப்பு மற்றும் அன்பிற்கு உள்ளாக்குவர்.

அண்டை வீட்டார் முதல் தெருவில் செல்வோர் வரை நாளது பொழுதும் நலம் விசாரிப்பர்.

எல்லோரும், அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் ஏதாவது உணவு பொருட்களை வாங்கி வந்து அல்லது செய்து கொடுத்து மகிழ துடிப்பர்.

கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம், எதை உண்ணக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம் என தெரிந்து கொண்டால் தங்கள் நலனும், கருவில் வளரும் குழந்தையின் நலனையும் காக்கலாம் அல்லவா?
கருவுற்று இருக்கும் போது சூடான உணவு வகைகள் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்குச் சுடுமா?
இது மிகுந்த கற்பனை. கரு வயிற்றுப் பகுதியில் வளர்கிறதே தவிற உணவு கையாளப்படும் வயிற்றிலோ அல்லது குடலிலோ அல்ல.

கரு, கரு பையில் நீர்மம் சூழப்பட்ட இடத்தில் வளர்கிறது. ஆகவே குழந்தையை, அம்மா சாப்பிடும் உணவின் சூடு தாக்காது.

ஆனால், அம்மாவின் வலி குழந்தையால் உணர முடியும். அதனால், எதை உண்பதாக இருப்பினும் மகிழ்வாக, அமைதியாக உண்ணுவது சிறந்தது.
அடுத்த கேள்வி, பனிக்கூழ்மம் (ஐஸ் க்ரீம்) சாப்பிடலாமா?
தாராளமாக பனிக்கூழ்மம் சாப்பிடலாம். அதே போல, குளிர்விக்கப்பட்ட எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சாப்பிடும் பொருள், நோய் உண்டாக்காத தரமான பொருளாக சாப்பிடுவது அறிவார்ந்தது. நோய் தொற்று ஏற்பட்டால், அதற்கு மருந்து உண்டால் அது குழந்தையையும் பாதிக்கும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இனிப்பு உடல் எடையை கூட்டும். அம்மாவின் எடையை மட்டும் அல்ல, வயிற்றில் வளரும் குழந்தையின் எடையையும் கூட்டும்.

குழந்தையின் எடை குறிப்பிட்ட அளவை விட கூடினால், இயற்கையாக பிறக்கும் போது பல சிக்கல்களை அது ஏற்படுத்தும்.
இனிப்பு எடையை கூட்டும் என்றால் அதற்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா ?
தேனும் இனிப்பு தான். இனிப்பு எந்த வகையில் உடலில் சென்றாலும், அது உடல் எடையை கூட்டும். ஆகவே முடிந்தவரை தேவைக்கு ஏற்ப மட்டும் இனிப்பு பொருட்களை உண்ணுவது சிறந்தது.
உடல் எடையை கவணமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால், உணவு கட்டுப்பட்டில் இருக்கலாமா?
செய்யவே கூடாத செயல், கருவுற்ற நாட்களில் உணவு கட்டுப்பாடு முயற்சிகளை மேற்கொள்வது.

அம்மா உண்ணும் உணவு என்பது அவளுக்கானது மட்டுமல்ல! கூடுதாக கருப்பையில் வளரும் மற்றொறு உயிருக்கும் சேர்த்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தை மற்றும் அம்மா, உடல் நலமுடன் இருக்க வேண்டும் என்றால் தேவையான சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டிம்.

இது உடல் எடையை பேணுகிற நேரம் அல்ல. வளரும் குழந்தை போதிய சத்துக்கள் கிடைத்தால் தான்
  1. நல்ல அறிவுடன் பிறக்கும்.
  2. எந்த ஊணமும் இல்லாமல் பிறக்கும்.
  3. எந்த நோய் நோக்காடும் இல்லாமல் பிறக்கும்.
குழந்தைக்கு குறிப்பிட்ட எடை கண்டிப்பாக தேவை. கருவுற்ற பெண்ணும் சரி, அவளின் உறவினர்களும் சரி, இதில் கவணமாக இருக்க வேண்டும்.
கருவுற்ற நாட்களில் பால் சேர்க்காத டீ குடிக்கலாமா?
டீ சுண்ணாம்பு சத்தை உரிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தான் சுண்ணாம்பு சத்துள்ள பால் கலந்து டீ குடிக்கிறோம்.

சுண்ணாம்பு சத்து என்பது அம்மாவின் எலும்புகளுக்கும், வளரும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது.

ஆகவே, பெண்கள் பொதுவாகவே பால் சேர்க்காத டீ குடிப்பதை தவிப்பது நல்லது.

கருவுற்ற பெண்கள் பால் சேர்க்காத டீ, எலுமிச்சை டீ போன்றவற்றை தவிர்ப்பது தான் சிறப்பு. கருவுற்ற நாட்களில் டீ குடிப்பதை முற்றிலும் தவிர்பது சிறந்தது.
இயற்கை பொருட்களால் ஆன ஃகெர்பல் பொருட்களை சாப்பிடலாமா?
வேண்டாம் என்பது தான் ஒற்றை வரி பதில். அவை, கருவில் வளரும் குழந்தைகளை பாதிக்கலாம்!!!. மருத்துவர் அறிவுரை இன்றி எதையும் நல்லது என சாப்பிட வேண்டாம்.
கருவுற்ற பெண்கள் கடையில் வாங்கிய பிரியானி சாப்பிடலாமா?
தாராளமாக சாப்பிடலாம். கடைகளில் வாங்கும் உணவு பொருட்களை தாராளமாக சாப்பிடலாம்.

ஆனால், ஒன்றை கவணத்தில் வைக்க வேண்டும். வாங்கி உண்ணும் பொருள் தரமானதாக, உடலில் ஒவ்வாமை ஏற்படுத்தாதவையாக வாங்கி சாப்பிடலாம்.
கருவுற்ற பெண்களுக்கு குருதியில் இனிப்பின் அளவும், உப்பின் அளவும் கூடுவது எதனால்?
இது அடிப்படையில் மரபியல் தொடர்பானது.

உப்பு மற்றும் இனிப்பு அளவை அவ்வப்போது மருத்துவர் அறிவுரையின் படி ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் குருதியில் உள்ள இனிப்பு மற்றும் உப்பு தான் அது வளர்வதற்கு உதவி புரிகிறது.

உப்பு மற்றும் இனிப்பு அளவு கூடுதாக இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு, அவற்றின் அளவு குறைந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு. உப்பு மற்றும் இனிப்பு தான் இதயம் முதல் எல்லா உறுப்புகளும் வேலை செய்ய அடிப்படையாக திகழ்கிறது.

ஆகவே அவற்றை கவணமுடன் மருத்துவர் அறிவுறையின் படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: