நிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்

நிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்
நிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்!

நிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று ஏற்ற சூழலில் வளரும் மிகப் பெரிய மரத்தின் புதை படிவம் கண்டுபிடிப்பு

இமாச்சல் மாநிலத்தில் 2.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மெசோசோயிக் ஊழியில் புவியியல் மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெசோசோயிக் ஊழி என்பது டைனோசர்கள் வாழ்ந்த ஊழி ஆகும். இதை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.

ட்ரையாசிக் (கி.மு 245 - 208 மில்லியன் ஆண்டுகள்), சுராசிக் (கி.மு 208 - 146 மில்லியன் ஆண்டுகள்) மற்றும் கிரிடோசியச் (கி.மு 146 - 65 மில்லியன் ஆண்டுகள்)

இமாச்சல மாநில தலை நகர் சிம்லா அருகே அம்மாவட்டத்தின் கரபதார் பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரப் படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய தொன்மையான மரப் படிமம் காணப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு இமாச்சல் மாநில கலை மற்றும் பண்பாடுத் துறை அருங்காட்சியக பொருப்பாளர் முனைவர் அரி செளவ்கான் ஊடகங்களிடம் பேசுகையில்,

"கரபதார் பகுதியில் பாறைகளுக்கு நடுவே மெசோஜோயிக் புவியியல் ஊழியில் (67௨50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உயிர்வாழ்ந்த மரத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல பரோக், சாகித் நகர் மற்றும் கசெளலி பகுதிகளில் மூன்று இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இமாச்சல மாநில கலை மற்றும் பண்பாட்டுத் துறை பாதுகாக்க திட்டமிட்டு வருகின்றன.

மூன்று திங்களுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் பன்னாட்டு அறிவியலார் குழு உலகின் முதல் உயிரினங்களின் தொன்மையான புதைபடிவங்களின் இயக்கத்தை காட்சிப்படுத்தினர்.

ஒரே தொகுதியில் உள்ளடங்கிய பல்வகை அணுக்கள் கொண்ட தனித்துவமான உயிரணுக்களை இம்மரம் பெற்றிருந்தது.

இது பல ஒற்றை அணுக்கள் ஒன்றிணைந்து நத்தை போன்ற பலவகை அணுக்களை கொண்ட உயிரினங்களால் உருவாகியதும், இந்த உயிரினங்கள், தனக்கு மிகவும் ஏற்ற சூழலைத் தேடி மண்ணுக்குள் ஊர்ந்து சென்று வாழ்ந்து இருக்கலாம்.

அதாவது இது நிலத்தடி வழியாகவே சென்று தனக்கு ஏற்ற சூழலலை கண்டறிந்து, அந்த சூழலில் வளர்வதை விரும்பும் சிறப்பம்சம் கொண்டதாக இம்மரத்தின் படிமக் கூறுகள் இருப்பதைக் காணமுடிகிறது."

என்று தெரிவித்தார்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: