ருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது? கசப்பு - இனிப்பு என

ருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது? கசப்பு - இனிப்பு என
ருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது? சிலர் கசப்பை விரும்புவதும், சிலர் இனிப்பை விரும்புவதும் எதனால்?

கசப்பான காப்பியை பலரும் இரசித்து ருசித்து குடிப்பதை பார்க்கிறோம். சிலர் கசப்பான சாராய வகைகளை இரசித்து நிதானமாக குடிக்கிறார்கள்.

சிலரோ, மிகுந்த இனிப்பு கொண்ட கோலாக்களை குடிக்கிறார்கள். இத்தகைய ருசி வேறுபாடு ஏற்படுவது எதனால்?

மனிதர்களிடம், இத்தகைய வேறுபாடுகள் இருப்பது எதனால்? அதாவது ஒரு சிலர் கசப்பை விரும்புவதும், வேறு சிலரோ மிகுந்த இனிப்பை விரும்புவது எதனால்?

முதலில் அறிவியலாளர்கள், இத்தகைய நாட்டம், மரபு சார்ந்தது என என்னினர். அதாவது, மரபணுனுக்கள் எவ்வாறு ஒரு ருசியை இரசிக்க தூண்டுகிறது என்பதை பொருத்து ஒவ்வொறுவருடைய ருசி மாறுகிறது என கருதினர்.

இதற்காக ஒரு ஆய்வை Northwestern பல்கலைகழக ஃபீன்பெர்க் மருத்துவ கல்லூரியின் அறிவியலாளர்கள் மேற்கொண்டனர்.

அறிவியலாளர் மெரிலின் கொரியலோஸ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், மனிதர்களிடம் கசப்பான காப்பி, சாரயம் அல்லது இனிப்பான கோலா என ருசி மாறுபாடு இருப்பது, அவர்களின் மரபணு அமைப்போ அல்லது மரபணு தூண்டுதலின் விளைவோ அல்ல.

இத்தகைய பொருட்களை உண்பதால் ஏற்படுகிற தாக்கம் இவர்களுக்கு அந்த பொருளின் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு உணவின் மீது நாட்டம் ஏற்பட்டுவதால் அதை அவர்கள் பெருமளவில் அருந்துகின்றனர். அதனால் பலவகை நோய் நொடிகள் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக, இனிப்பு மிக்க எந்த பொருள் உண்டாலும், அதன் பக்க விளைவுகளை பட்டியலிட இடம் இருக்காது.

அதே போல சாரய வகைகளும் பற்பல நோய்களுக்கு அடிப்படையாக திகழ்கிறது.

அராய்சியாளர்கள் சுமார் 360,000 நபர்களிடம் அவர்களின் உணவு பழக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அவர்களை 24 மணி நேர கண்கானிப்பில் வைத்திருந்து அவர்களின் மரபணு தொகுப்புகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில், மரபணுக்கள் ருசியை முடிவு செய்வதில்லை என்பதையும், குறிப்பிட்ட உணவு பொருள்பருகுவதால் உடல் எவ்வாறு பயனடைகிறது என்பதை பொருத்து ருசி அமைகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: