பல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்!

பல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்!
பல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்!

பற்கறைகளை நீக்க இன்றைய மருத்து முறையில் கூர்மையான ஆயுதம் கொண்டு தேய்த்து மருத்துவர்கள் தூய்மை செய்கின்றனர்.

இவ்வாறு தேய்த்து கறைகளை நீக்குவதால், பற்களின் மேல் பூச்சுகளும் சேதம் அடைகின்றன. அதனால் பல் தேய்ந்து பிற இடர்பாடுகளுக்கு வழிவகை செய்கிறது.

இதற்கு தீர்வாக, பொடி எந்திரன்கள் வடிவமைத்து அவை வாயினுள் ஒரு படை அமைப்பு போல் சென்று, ஒவ்வொறு பல்லாக காந்த புலன் கொண்டு கறைகளை அகற்றும் வன்னம் பல் மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடைங்கிய குழு ஒன்று ஒரு நுட்பத்தை வடிவமைத்துள்ளது.

பென்சில்வானியா பல்கலைகழகத்தை சார்ந்த பல் மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் எந்திர பொறியாளர்கள் குழு, பற்கறைகளை நீக்க எந்திரன்களை பொடிதாக வடிவமைத்த்டு பாதுகாப்பான முறையில் கறைகளை அகற்றி காட்டியுள்ளனர்.

இது நாள் வரை ஒரு பல் மருத்துவர் தனது நேரத்தை செலவு செய்தால் தான், அதுவும், கவணம் சிதராமல் உன்னிப்பாக வேலை செய்தால் தான், பல் கறைகளை அகற்ற முடியும்.

இந்த சூழலில், மருத்துவரின் நேரம் மட்டுமல்லாது, பற்கறை தூய்மை செய்ய வந்தவர்களின் நேரமும் வீண்டிக்கபட்டது.

இதற்கு ஒரு தீர்வாக எந்திரன்கள் துணையுடன் பற்கறைகளை நீக்கும் புதிய நுட்பத்தை வடிவமைத்தனர்.

செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள் பல் கறைகளை நீக்குகின்றன செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள் கறைகளை நீக்குகின்றன.

பென்சில்வானியா பல் மருத்துவக் குழு, பென்சில்வானியா பொறியாளர்கள் விசய குமார், ஸ்டீகர் மற்றும் காத்லீன் ஸ்டீப் ஆகியோர் இரும்பு ஆக்சைடால் ஆன நானோ துகள்களை எந்திர வடிவமைப்பாக காந்தம் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைத்து வருவதை கண்டனர்.

இதை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள பென்சில்வானியா பல் மருத்துவர்கள் அடங்கிய குழு முடிவெடுத்தது.

இரும்பு ஆக்சைடை ஒரு நீர்மத்தில் மிதக்க விட்டு,, அந்த துகழ்களை காந்தம் மூலம் கட்டுப்படுத்தி கறைகளை தாக்கும் விதமாக வடிவமைத்தனர்.

மற்றொறு முயற்சியாக, இரும்பு ஆக்சடின் மேல் கூழ்மத்தை படரவிட்டு, அதைக்கொண்டு கறைகளை அகற்றினர்.

மேற்சொன்ன இரு ஆராய்சிகளும் முதலில் ஆய்வக கூடகங்களில் க்ண்ணாடி குடிவைகள் துனையுடன் நடத்தப்பட்டன.

பின், பல் வரிசைகளில் இவை முயற்சிக்கப்பட்டது.

இதில் இரு வகையில் வடிவமைக்க்ப்பட்ட முயற்சிகளுமே வெற்றிகரமாக கறைகளை அகற்றி, பற்களின் மேல் படிந்துள்ள நுண்ணுயிர்களை அகற்றின.

இந்த முயற்சிகள், பழைய முறையான தேய்த்து தூய்மை செய்தல் என்பதற்கு பதிலாக, உழுது தூய்மை செய்தல் என்கிற நுட்பத்தை கடைபிடிக்கிறது.

இதனால், எல்லா வகை பற்கறைகளும் நீக்க இயல்கிறது.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: