செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு

தமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு

பாகம் 1 / பாடம் 6


தமிழ் மருந்து வகைகள் - தமிழ் மருந்து ஆயுள் அளவு

தமிழ் மருந்து வகைகள்

தமிழ் மருந்தானது பொதுவாக உள் மருந்து வெளி மருந்து என இரு வகைப்படும்.

உள் மருந்து என்பது உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகளையும், வெளி மருந்து என்பது உடலின் வெளிப் பகுதியில் மேலுக்குப் பயன்படுத்தும் மருந்துகளையும் குறிப்பிடுகிறோம்.


இவை ஒவ்வோன்றும் 32 வகைப்படும்.


உள் மருந்துகள்:


சுரசம், சாறு, குடிநீர், கற்கம், உக்களி, அடை, சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய், பணப்பாகு, நெய், இரசாயணம், இளகம், எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேணூரல், தீநிர், மெழுகு, குழம்பு, பதங்கம், செந்தூரம், நீறு, கட்டு, உருக்கு, களங்கு, சுண்ணம், கற்பம், சத்து, குரு குளிகை.


வெளி மருந்துகள்:


கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம், மை, பொடி திமிர்தல், கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபாணம், களிம்பு, சீலை, நீர், வத்தி, சுட்டிகை, சலாகை, பசை, களி, பொடி முறிச்சல், கீரல், காரம், அட்டை விடல், அருவை, கொம்பு கட்டல், உரிஞ்சல், குருதி வாங்கல், பீச்சு.


மருந்துகளின்ஆயுள் அளவு:


வழக்கமாக சில மருந்துகள் சில நாட்களுக்கு பிறகு கெட்டு விடுகிறது.

மற்றும் சில மருந்துகள் பார்வைக்கு நன்றாக இருப்பினும், சில நாட்களுக்கு பிறகு அவைகளின் வீரியங் குன்றியிருக்குமாதலின் அத்தகைய மருந்துகளை வழங்குவதால் எந்தவகையிலும் நோயாளியின் நோய் தீர்விற்கு பயனில்லை.

ஆகையால் ஒவ்வொரு மருந்துகளுக்கும் குறிப்பிட்ட ஆயுள் அளவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

அவற்றுள் சில தேவையான மருந்துகளின் ஆயுள் அளவை மட்டும் இங்கு கூறப்படும்.

சுரசம், சாறு, குடிநீர், கற்கம், உக்களி, அடை, இவை ஓர் இரவு.

சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய் - இவைகள் மூன்று திங்கள், அதாவது 90 நாட்கள்

மணப்பாகு, நெய், இரசாயணம், இளகம், இவைகள் ஆறு திங்கள்

எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேணூரல், தீநிர் இவைகள் ஓர் ஆண்டு.

பதங்கம் பத்து ஆண்டு.

செந்தூரம் எழுபத்தைந்து ஆண்டு.

மெழுகு, குழம்பு இவைகள் ஐந்து ஆண்டு

நீறு, கட்டு உருக்கு, களங்கு இவைகள் நானூறு ஆண்டு.

சுண்ணம் ஐநூறு ஆண்டு.

கற்பம், சத்து, குரு குளிகை இவைகள் மிக்க ஆண்டுகள்.

மேற் கூறப்பட்ட நாள் அளவுக்குப் பின் அம்மருந்துகளை பயன்படுத்தல் கூடாது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: