காட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்

காட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்

யானைகள் பல்லாயிறம் ஆண்டுகளாக ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை தம் தாய் நாடாக வாழ்ந்து வருகின்றன.

மனிதர்கள், அவற்றின் இருப்பிடத்தில் புகுந்து, அவற்றிற்கு பல வகைகளில் அச்சுருத்தல் ஏற்படுத்தி அதன் மன்னில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விரட்டி அடித்து வருகின்றனர்,

கருநாடக  காட்டுப் பகுதியில் இருந்து இரு யானைகள் தற்பொழுத்து ஓசூர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

காட்டு வளத்தை மனிதல் பல வகைகளில் அழித்ததால், அவறிற்கு அங்கே உணவு இல்லை.  அதனால் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியில்  வந்து உளவு பயிர்களை உண்டுவரும் அவல நிலை இந்த காட்டு யானைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கொம்பன், மார்க் என்று மனிதர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த இரு யானைகளில், கொம்பன் யானை தாக்கியதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவை இரண்டும் தமக்கு உறிய காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து ஏற்படுத்தும் மனிதர்கள், தமக்கு இதனால் அச்சம் என கூறி, காட்டு இலாகாவினர் துணையுடன்  2 யானைகளைப் பிடித்து முதுமலை முகாம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதற்காக மாரியப்பன், பரணி என்ற இரு கும்கி யானைகளை ஆனைமலை மற்றும் முதுமலையிலிருந்து, ஓசூர் காட்டுப் பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதனிடையே கெலவரபள்ளி அணை பகுதியில் இருந்த இரு காட்டு யானைகளும், மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு வசதியாக அங்கிருந்து பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டு உள்ளன.

அப்பகுதியில் மேகமூட்டமாக இருப்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல், கும்கி யானைகள் மூலம் அவற்றை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது,

தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: