நச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி!!!

நச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி!!!

சுறுமியை காதலித்ததால் போஸ்கோ சட்டத்தில் கைதான ஆண் மகன் ஒருவன், சிறையில் இருந்து மீண்டு வந்து, தன் காதலி கரம் பிடித்துக்கொண்டே நச்சு குடித்து, அணையில் குதித்து தன் உயிர் மாய்க்க முயன்றுள்ளார்.

இதனிடையே, காதலனின் கையை உதரிவிட்டு காதலி ஓடியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காதலி முன்பு நச்சை குடித்துவிட்டு, அணையில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற காதலன், நச்சு சரியாக வேலை செய்யாத்தால், அரை நினைவுடன் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று, போவோர் வருவோரிடம் கெஞ்சி உயிர் பிழைத்துள்ளார்.

இது அரியாத காதலி கொடுத்த தகவலின் பேரில், காதலனின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் இரண்டு நாட்களாக அணையில் தேடி உள்ளனர்.

போடி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் விஜய். இவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார். திருமண வயது நிறைவடையாத நிலையில் கடந்த மே 2 ந் நாள் காதலனும் காதலியும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை கடத்திச் சென்றதாக விஜய் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மட்டும் பிடித்து சிறையில் அடைத்தனர்.

3 திங்களாக சிறையில் அகப்பட்ட காதலன் கடந்த 14 ஆம் நாள் நிபந்தனை பிணையில்  வெளியில் வந்துள்ளார்.

வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், வருவாயும் இன்றி, போடி காவல் நிலையத்தில் காலையும், மாலையும் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, காதலனை தேடி காதலி வர, இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு வைகை அணைக்கு வந்துள்ளனர்.

இருவரும் நாள் முழுவது அங்கு சுற்றி பொழுதைக் கழித்துவிட்டு, மாலையில் வைகை அணை மதகுப் பகுதிக்கு வந்துள்ளனர். முதலில் நச்சை இருவரும் குடித்து குதிப்பதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நச்சை குடிக்க மறுத்த அந்த பெண், தயங்கியபடியே நிற்க, காதலன் மடக்கென்று நச்சை குடித்துள்ளார்..

ஒன்றாக குதிக்கும் எண்ணத்தில் விஜய் அணையில் இருந்து கீழே குதிக்க, அந்த பெண்ணோ கையை உருவிக்கொண்டு ஓடிவிட்டார்.

அங்கிருந்து ஓடியவர் தனது காதலன் அணையில் குதித்து தற்கொலை செய்து விட்டதாக காவலர்களிடம் தெரிவிக்க, காவலர்கள் அந்த பெண்ணை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் செத்துப்போன விஜயின் உடலை தேட தொடங்கினர்.

இரவு வெகுநேரம் ஆகியும் விஜயின் உடல் கிடைக்காத நிலையில், திங்கள் கிழமை 2 வது நாளாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். மாலை வரை தேடியும் விஜயின் சடலம் சிக்கவில்லை.

இந்த நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக விஜய் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது பாதியில் காதலனை கழட்டிவிட்ட நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.

உண்மையில் சாகும் போதும் தனது காதலி உடன் வருவாள் என்ற நம்பிக்கையில் இருந்த தன்னை காதலி கைவிட்டதால் ஏமாற்ற அடைந்த விஜய் உயிர்பிழைக்க விரும்பியுள்ளார். அரைகுறை மயக்கத்துடன் அணை நீரில் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று அங்கு மீன் பிடிக்க வந்த சிலரிடம் தான் காதலிக்காக நச்சு குடித்த தகவலை சொல்லி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் இரக்கப்பட்டு விஜய்யை மீட்டு மோட்டார் சைக்கிளில் வைத்து தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவத்திற்காக சேர்த்துள்ளனர். விஜய் குடித்த பூச்சி மருந்து நச்சு தன்மை குறைந்தது என்பதால் அவரது உயிருக்கு உடனடியாக ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: