சென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்

சென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்

சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் மின்மினி பூச்சிகள் போல நீல நிறத்தில் மின்னியதாகத் ஏராளமானோர் இரவில் கடற்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தகைய நீல நிற வெளிச்சமானது டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணுயிர் தாவரம் ஏற்படுத்துவது ஆகும்.

இத்தகைய தாவரங்கள் கடலில் வாழக்கூடிய பூச்சிகள் மீன்களுக்கு அடிப்படை உணவாக இருந்து வருகின்றது.

டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய நுண்ணுயிர் தாவரங்கள் கோடிக்கணக்கில் கடல் நீரில் காணப்படுகின்றவை.
இந்த தாவிர உயிரிணங்கள் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் பொழுது கடற்கரை நீல நிறத்தில் ஒளிர்வது வளக்கமான ஒரு நிகழ்வுதான் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

இத்தகைய தாவரங்களை தொந்தரவு செய்தால் தன்னுடைய உடலில் இருந்து பளீர் என்று நீல நிறத்தில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை,

பகல் நேரத்திலும் இந்த தாவிரங்கள் தம் ஒளியை உமிழும் என்றாலும், ஞாயிறின் ஒளி பெரும் வெளிச்சம் என்பத்தால், இந்த இயிரிணங்களின் ஒளி நமக்கு கண்ணில் தென்படாமல் போகிறது.

பகலில் கருப்பு உடை அணிந்து கொண்டு, கடலின் ஆழத்தில் சென்று பார்த்தல் அதன் வெளிச்சம் நீல நிறத்தில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

இத்தகைய தாவரங்கள், கப்பல் அதன் மீது செல்லும் போதும், கடல் சீற்றம் ஏற்படும்போது தொந்தரவு ஏற்பட்டு அதன் உடம்பில் இருந்து வெளிச்சைத்தை உமிழ்கிறது.

வெளிச்சத்தை வெளிப்படுத்தாத போது, இந்த நுண்ணுயிர்களை வழக்கமான கண்களால் பார்க்க முடியாது.

நுண்நோக்கி மூலமாக தான் பார்க்க முடியும். தற்போது இந்த வகை நுண்ணுயிர் தாவரங்களின் பெரும் அளவில் சென்னை அருகே காணப்படுவது எதனால் என்றால், தற்பொழுது பெய்து வரும் மழை, அவற்றின் இனப்பெருக்கத்திற்கு தூண்டுதலாக இருந்துள்ளதால், அவை பல்கி பெருகி காட்சி அளிக்கின்றன.

நிலப்பரப்பில் இருந்து கடலுக்கு செல்ல கூடிய மழை நீருடன், வேதி பொருட்களான பாஸ்பேட் மற்றும் நைட்ரேட் போன்றவை பெருமளவில் எடுத்துச் செல்வதால் இத்தகைய நுண்ணுயிர்கள் பல்கி பெறுகின்றன.

இத்தகைய வெளிச்சம் தரக்கூடிய டைனோஃப்ளேஜலேட் நுண்ணுயிர் தாவரங்கள் எந்தவித பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படுத்தாது.

அதே வேளையில் மனிதர்களால் பாதிப்படைவதால் அவை ஒளியை உமிழ்கின்றன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: