மருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை

மருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை

பாகம் 1 / பாடம் 8


தமிழ் மருந்து செய்யும் முறை


தமிழ் மருந்துகளை செய்யும் போது கவனிக்க வேண்டிய சில அடிப்படையான விதிகளையும், செய் பாகங்களையும் கூறப்படும்.

மருந்துகளை செய்யும் போது சரக்குகளைக் கூடிய மட்டும் தூயதாகவும், வீரியங் குன்றததாகவும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

வாய் விளங்கம், திப்பிலி, வெல்லம், கொத்தமல்லி, தேன் முதலிய பொருட்கள் சற்று பழகினதாக இருப்பின் நன்று.

ஆடாதோடை, சீந்தில், நில வேம்பு, நன்னாரி வேர், அசுவ கந்தி, நிலப் பூசனி போன்ற சரக்குகள் பச்சையாக இருப்பின் நன்று.

மூலிகைகளின் அங்கத்தைக் குறிப்பிடாத இடத்தில் அதன் வேரை அல்லது தண்டை சேர்ப்பது தான் முறை

ஏதேனும் கூறப்பட்ட சரக்குகள் கிடைக்கப் பெறாவிடில் அதே குணத்தையுடைய வேறு சரக்கை அதற்குப் பதிலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

சரக்குகளின் எடை கூறப்படாத விடங்களில் அவைகளைச் சம எடையாகக் கொள்ளவும்.

ஒவ்வொரு சரக்கையும் மருந்துகளில் சேர்க்கு முன்பு சுத்தி செய்து சேர்க்கவேண்டும்.


மருந்து செய்யும் முறை - சுத்தி செய்தல்


எச்சரக்கையும் வழங்கு முன்பு முறைப்படிச் சுத்திசெய்து வழங்குவதே மருத்துவ முறையாம்.

சுத்தி என்பது ஈண்டு கழுவுதல், துடைத்தல், தூயதாகப் பார்த்தெடுத்தல் முதலிய செய்கைகளை மட்டுங் குறிப்பிடுவதல்ல.

சரக்குகளின் பண்பையும் ஒரளவு மாற்றி யமைக்குந் தன்மை வாய்ந்ததென்பதை நன்குணர வேண்டும்.

மருந்து முறைகளில் சரக்குகளின் சுத்தி மிக இன்றியமையாததென்பதையும், இதன் தவரால் கோரிய பலன் கிட்டாமல் போவதுடன் உயிருக்கும் தீங்கை விளைவிக்குமென்பதை அறிதல் வேண்டும்.

மருத்துவத் துறையிலே பொருட்களின் சுத்தி என்பது ஓர் சரக்கில் இதர சரக்குகளின் கலப்போ, மண் தூசு முதலிய குப்பைகளோ, தேவையற்ற வெள்ளிப்புற அமைப்புகளோ உடலுக்கு தீமையை விளைவிக்குமளவு வீரியமோ நச்சுக் குணங்களோ, இல்லாமல் படியும்,

அதே நேரத்தில் அச்சரக்குகள் செய்கை குணம் முதலியன முற்றுங் குன்றாமலும் மாறாமலும் இருப்பதுடன், அச்சரக்கின் இயற்கைப் பண்பிற்கேற்றபடி உடலில் தொழில் நடாத்தி நன்மை புரியத்தக்கதாயும் அதனைத் தூய்மைப்படுத்தி திருத்தி யமைக்கும் முறைமையாம்.

இதைப் பற்றி தெளிவாக சுத்தி முறைகள் என்னும் தலையங்கத்தின் கீழ் கண்டுணர்க.


சாறு எடுத்தல்


ஈரப்பசையுள்ள மூலிகைப் பொருட்களினின்று நீர்மம் போன்ற சத்தை எடுப்பதே சாறு எடுத்தல்.

துளசி போன்ற சில மூலிகைகளை இடித்துப் பிழிந்தால் சாறு கிடைக்கும்.

இவ்வாறு இடித்துப் பிழிந்தால் சாறு கிடைக்கப்பெறாத சரக்குகளை பிட்டவியலாக வேகவைத்தோ, அனலில் வாட்டியோ, நீர் விட்டு அரைத்தோ, வேறு சரக்குகளை துனையாக சேர்த்தோ சாறு எடுக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஆடாதோடையை அவித்தும், தும்மட்டிக்காயை அனலில் வெதுப்பியும், வெள்ளைப்பூண்டை அரைத்து கீலையிலூட்டி வதக்கியும், இஞ்சியை நீர்விட்டு அரைத்தும், தேங்காய், புங்கம்வேர் முதலியவைகளைத் திருகியும், கற்றாழை போன்ற குழகுழப்பான பொருட்களில் கடுக்காய் போன்ற துவர்ப்பு சூரணங்களைச் சேர்த்தும் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்கப்படும்.


சல்லித்தல் செய்தல்


ஓர் பாத்திரத்தின் வாய்க்கு மெல்லிய மல் துணியைக் கட்டி, அதன்மீது சூரணம் முதலிய இடித்தெடுத்த தூள்களைத் தூவி கையால் தேய்த்து அடியில் கிடைக்கும் மெல்லிய சன்னமான தூள்களை எடுத்துக்கொள்ளல். இதனை வடிகட்டல் என்றும் கூருவர். வஸ்திரகாயம் என வட மொழியில் கூறப்படும்.


அரைத்தல்


மருந்துச் சரக்குகளைத் தூள் செய்து கல்வத்திலிட்டு அரைக்கும் போது மூலிகைச் சாறு முதலிய நீர்மங்கள் துளி துளியாக விட்டு குழம்பு பதத்திலேயே குறிப்பிட்ட மணி நேரம் வரையில் அரைக்க வேண்டும். அவ்வாறு அரைத்து வரும் போது குழவியின் ஓரங்களிலும், கல்வத்தின் ஓரங்களிலும் படிந்துள்ள மருந்துகளை அவ்வப்போது சுரண்டியால் சுரண்டிப் போட்டு, மருந்துகள் யாவும் ஒருமிக்கக் கலந்து மைபோலாகும் வரையில் அரைக்கவும்.

சுரசுரப்பாகவும், புள்ளிகள் விழுந்தும், அதிக சூடவாகவும் இல்லாமல், மழமழப்பாகவும் கருப்புநிறக் கல்லினால் செய்யப்பட்ட கல்வமே மருந்துகள் அரைப்பதற்குச் சிறந்ததாம்.


வில்லை செய்தல்


சரக்குகளைக் கல்வத்திலிட்டு ஏதேனும் நீர்மம் விட்டு அரைத்ததை மெழுகு பதத்தில் வ்ழித்தெடுத்து அகலில் அடைபோல் வில்லையாகச் செய்வதே வில்லை செய்வதாம்.

சரியான மெழுகு பதத்தில் சுரண்டி எடுக்காவிடில் வில்லை செய்யவராது. வில்லைகளில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்துவிடும்.

ஆகவே முறைக்கேற்றபடி ஓரே வில்லையாகவோ, அல்லது பல சிறு வில்லைகளாகவோ வெடிப்புகள் இல்லாதபடி செய்து நன்றாய் உலர்ந்த பின்பே புடமிடவேண்டும். இன்றெல் மருந்து கருக்கும்.


உலர்த்தல்


ஈரம் போகச் செய்வதே உலர்த்தல் எனப்படும். மருந்து முறைகளில் உலர்த்த வேண்டியவைகள் யாவற்றையும் கூடுமானவரையில் வெய்யிலில் வைக்காமல் நிழலில் வைத்து உலர்த்தி எடுப்பதே நன்று.


கவசஞ் செய்தல்


மூலிகைகளையோ அல்லது மற்ற சரக்குகளையோ அரைத்து கற்ப பதத்தில் எடுத்து, குறிப்பிட்ட சரக்கு அல்லது வில்லைக்கு மேலே நாற்புறமுஞ் சூழ்ந்திருக்கும்படி கெட்டியாக பூசி அமைக்கும் முறையே கவசஞ் செய்தல் எனப்படும்.

இவ்வாறு கவசஞ் செய்வதில் வெடிப்புகள் ஏற்படாவண்ணம் பார்த்தல் மிக தேவையானதாகும்.


சீலைமண் செய்தல்


நல்ல களிப்புள்ளதும், மணல் கல் முதலியன கலப்பற்றதுமான செழிப்பான களிமண்ணைக் கொண்டு வந்து சிறிது நீர் தெளித்து கெட்டி பதமாக அரைத்து, அகலின் பொருந்துவாய்க்கு சந்தில்லாமல் பூசி, பின்பு நான்கு விறற்கடை அகலமுள்ள நிகளச் சீலைத் துண்டுகளில் களிமண்ணைத் தடவி அதை பொருந்துவாய்க்கு சுற்றி கெட்டிப்படுத்துவதே சீலைமண் செய்தல் எனப்படும்.

வளக்கமாக ஏழு சீலைமண், அதாவது ஏழு சுற்று செய்வது வழக்கம்.

நெருப்புக்குப் புகைந்து போகுஞ் சரக்குகளைச் சீலை செய்யும்போது மிகவும் வலிவாக இருக்கும் பொருட்டு உளுத்தம்மாவையோ, அல்லது சுண்ணாம்பும் வெல்லமும் சேர்ந்த கலவையையோ கெட்டியாக சீலையில் தடவி சீலை செய்வதுண்டு.


அகலிலடக்கல்:


வாய் பொருத்தமான இரண்டு மண் அகல்களைச் சேகரித்து வாய் புறத்தை நன்றாகத் தேய்த்து சந்தில்லாமல் பொருந்தும்படி பார்த்து, அதில் ஓர் அகலில் மருந்துச் சரக்கு அல்லது மருந்து வில்லையை வைத்து மற்றொரு அகலால் பொருந்த மூடுதலையே அகலிலடக்கல் எனப்படும்.


மருந்து செய்யும் முறை - புடமிடல்:


வளக்கமாக சீலை செய்த மருந்தை விறட்டிகளின் இடையில் வைத்து தீயிட்டு வெந்தாறிய பின்பு எடுப்பதே புடமிடுதல் எனப்படும்.

இதில் புடம்போட வேண்டிய விறட்டிகளில் பாதி பாகத்தை தரையில் சற்று பறவியபடியும் ஒன்றன் மீது ஒன்றாகவும் அடுக்கி அதன் நடுவில் சீலை செய்த மருந்தை வைத்து அதன் மீது மிகுதியுள்ள பாதிபாகம் விறட்டிகளையும் பிட்டு, நாற் புறமும் சூழ நெருங்க வட்டமாக அடுக்கி நாற் புறமும் தீயிடவும். புடமானது வெட்ட வெளியாகவும், காறோட்டம் அதிகமாக இல்லாததுமான இடத்தில் போடுதல் நல்லது.


பூவியில் குழிதோண்டி அதில் புடமிடுவது சிறந்த முறையாகும்.

ஒரு விறட்டியில் புடமிடுவதை காடை புடமென்றும், மூன்று விறட்டியில் புடமிடுவதை கவுதாரி புடமென்றும், பத்து விறட்டியில் புடமிடுவதை குக்குட புடம் அல்லது கோழிபுடமென்றும், ஐம்பது விறட்டியில் புடமிடுவதை வராக புடமென்றும், ஆயிரம் விறட்டியில் அல்லது ஒரு முழ சதுரமும், ஒன்னறை முழ ஆழமும் உள்ள குழிதோண்டி அது நிறைய அடுக்கிய விறட்டியில் வைத்து புடமிடுவதை கஜபுடமென்றும் கூறப்படும்.

மற்றும் வெய்யலில் வைத்தெடுப்பதை ஞாயிறுபுடமென்றும், உமியின் இடையில் வைத்து கொளுத்தி எடுப்பதை உமிபுடமென்றும், தானியக் களஞ்சியத்தின் இடையில் வைத்தெடுப்பதை நெற்புடம் அலலது தானியப்புடமென்றும், பூவியில் புதைத்து வைத்து எடுப்பதை பூவிபுடமென்றும், மணலின் இடையில் வைத்து விறட்டியை வைத்து தீயிட்டு எடுப்பதை மணல் மறைவு புடமென்றும், பனியில் வைப்பதை பனிப்புடமென்றும் வழங்கப்படும்.

புடமானது நன்றாய் ஆறினபின்புதான் பிரித்து மருந்தை எடுக்க வேண்டும்.

சூட்டுடன் எடுக்கக்கூடாது. புடத்தினின்று எடுக்கப்பட்ட மருந்தின்மேல் காணும் சீலைமண் சிவந்து காணுமாயின் தீயின் அளவு சரியான அளவென்றும், சீலைமண் உதிர்ந்து காணுமாயின் தீயின் அளவு அதிகமென்றும், சீலைமண் கறுத்து காணுமாயின் தீயின் அளவு குறைவு என்றும் அறிக.

ஒருமுறை புடமிட்டெடுத்த மருந்து வெண்மையாகவோ அல்லது சிவப்பாகவோ இல்லாமல் கருப்பாகவும், மிருதுவாக இல்லாமல் கடினமாகவும் இருப்பின், முன் அரைத்த மூலிகைச் சாற்றிலேயே மீண்டும் அரைத்து, நல்ல நிறத்தையும், மிருதுத் தன்மையும் அடையும் வரையில் புடமிடவேண்டும்.


எரித்தல்:


விறகுகளைக் கொண்டு எரித்தல், தீயின் அளவைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படும். இரண்டு விறற்கடை கனமுள்ள ஒரு விறகைக்கொண்டு ஒளிக்கு ஒப்பான சுடர் எழும்பும்படி எரித்தல் தீபாக்கினி என்றும், மேற்குறிப்பிட்டபடியே இரண்டு விறகுகளைக் கொண்டு, தாமரை மொட்டைப் போல் தீ பறவ எரிப்பதை கமலாக்கினி யென்றும், மேற் குறிப்பிட்டபடியே மூன்று அல்லது கூடுதல் விறகுகளைக் கொண்டு தீயானது நாற்புறமும் சூழ நன்கு எரிப்பது காடாக்கினி யென்றுங் கூறப்படும்.

ஒன்றும் கூறதவிடத்து சிறுதீயாக எரித்தலே முறையாம்.

சில மருந்துகளில் குறிப்பிட்ட சில விறகுகளைக் கொண்டு எரிப்பது முண்டு.


வறுத்தல்:


வறுகக் வேண்டிய மருந்துகளை சட்டியிலோ கடாயிலோயிட்டு அடுப்பிலேற்றி எரித்து கரண்டி அல்லது சில வேர்களைக் கொண்டு தேய்த்து பதமாகும் வரையில் வறுக்கவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது மருந்துகள் மேலே தெரிக்காமலும், மருந்தின் புகை மேலே தாக்காமலும் தள்லீ இருந்து நீண்ட கரண்டி கொண்டு வறுத்து வருதல் நன்று.


உலையிலிட்டு ஊதல்:


இது உலோகம் முதலிய கடினமான பொருட்களை சுண்ணம் முதலியன செய்யும் பொருட்டு மூசையிலிட்டு வாய் மூடிச் சீலை செய்து கன்னான் உலையில் வைத்து, கரிபோட்டு மூசையழுக மும்முறை ஊதி எடுப்பதுண்டு.

சுண்ணத்திற்கு ஒரு துருத்திக் கொண்டும் களங்கு உருக்கு முதலியவை கட்கு இரு துருத்தி கொண்டும், சத்து முதலியவைகட்கு நான்கு துருத்தி கொண்டும் ஊதியெடுப்பது முறை.

இத்தகைய காரியங்களுக்கு வஜ்ஜிர மூசையைப் பயன்படுத்தல் நன்று.


வஜ்ஜிர மூசை செய்தல்:


சாம்பல், புற்று மண், இரும்புச் சிட்டம், வெள்ளைக்கல் (அண்டக்கல்) இவைகளைச் சம எடையாக எடுத்து, அத்துடன் பொடியாகக் கத்தரித்த தலைமயிர் சிறிது சேர்த்து ஆட்டுப் பாலிலிட்டு வேகவைத்து உலர்த்திப் பொடித்துக் கல்வத்திலிட்டு சுண்ண நீர்விட்டு இரண்டு இரவு நன்கு அறைத்து மெழுகு பதத்தில் மூசையும் மூடியும் செய்து உலர்த்தவும்.

இதுவே வ்ஜ்ஜிர மூசை எனப்படும். இத்தகைய மூசைகளில் இரசம், உபாசம், பாஷாணம் முதலிய சரக்குகளை வைத்து ஊத நீறும்.


உருக்குதல்:


அயம், செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவைகளை மூசையிலிட்டு உருக்கும் போது சிறிது வெண்காரத் துண்டை சேர்த்து உருக்க நன்றாக உருகும்.

நாகம், வங்கம் முதலிய எளிதில் உருகும் சரக்குகளுக்கு வெண்காரம் சேர்க்க வேண்டியதில்லை.

ஆனால் நாகம் முதலிய சரக்குகளை சுத்தி செய்யும் பொருட்டு உருக்கி மூலிகைசாறு முதலியவைகளில் சாய்க்கும் போது தள்ளி இருந்து சாய்க்க வேண்டும். இன்றேல் மருந்து சீறியெழுந்து உடலில்பட்டு ஆபத்தை விளைவிக்குமென்பதை கவனத்தில் வைக்கவும்.


மருந்து செய்யும் முறை - தொந்தித்தல்:


ஏதேனும் இரண்டு சரக்குகளை ஒன்றறக் கலக்கச் செய்வதற்கே தொந்தித்தல் என்று பெயர்.

இது பெரும்பாலும் இரசத்துடன் வங்கம் அல்லது நாகத்தைத் தொந்தித்தலைக்குறிக்கும்.

அவ்வாறு தொந்திப்பதில் முதலில் நாகம் அல்லது வங்கத்தை ஓர் இரும்பு கரண்டியிலிட்டு தீயிலிட்டு உருக்கி, திரவம் போல் ஆடுஞ்சமயத்தில் கீழிறங்கி சற்று சூடாறி உறையும் பதத்தில் ரசத்தை அதில்விட, நாகம் அல்லது வங்கம் ரசத்தை கிரகித்துக்கொண்டு வெட்டையாகும்.

அதிக சூடாயிருக்கும் போது இரசத்தை சேர்த்தால் இரசமானது வெப்பத்தினால் ஆவியாகி சிறிது வீணாகுமென்பதையும், நன்றாக உறைந்துவிட்டால் இரசத்தை கிரகிக்காதென்பதையு முணரவேண்டும்.

இரசத்துடன் கந்தகத்தைத் தொந்திப்பதாயின் முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துக்கொண்டு, பின்பு இரசத்தைச் சேர்த்து அரைக்க அவை இரண்டுஞ் சேர்ந்து கருப்பு நிறமான தூளாகும்.

இதில் ரசம் உருத்தெரியமல் மறைந்து (மடிந்து) இருக்கும்.


சுருக்கு கொடுத்தல்:


ஒருவாய் யகலமான மண் சட்டியை யாவது , அல்லது அச்சட்டியின் நடுவே சுமார் இரண்டு அங்குலம் வட்டமுள்ள துவாரஞ் செய்து அதன் மீது பொருந்தும்படியாக ஓர் அப்பிரகத்தகட்டை வைத்து, ஓரங்களில் உளுந்து அரைத்து சந்தில்லாமல் தடவி காயவைத்ததையாவது அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து, அப்பிரகத்தகட்டின் மேல் சுருக்குகொடுக்கவண்டிய சரக்கை வைத்து,முறைகளுக்குத்தக்கபடி மூலிகைச்சாறு ஜெயநீர் முதிலிய ஏதேனும் ஓர் நீரை ஓர் சிறு உச்சிக்கரண்டியினால் எடுத்து சரக்கின் மீது சிறிது சிறிதாக விட்டு, அது சுண்ட சுண்ட மேலும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது விட்டுக் கொண்ட போது, மருந்தானது காந்தாமலும், அடிபிடிக்காமலும் இருக்கும் பொருட்டு, கரண்டியினால் அவ்வப்போது புரட்டிக்கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்ட மணி நேரமோ அல்லது குறிப்பிட்ட அளவு சாறு முதலிவைகள் தீரும் வரையிலோ அல்லது அச்சரக்குகட்டு அல்லது மெழுகாகும் வரையிலோ செய்து எடுத்துக்கொள்வதுண்டு.

இதனையே சுருக்கு கொடுத்தல் என்பர். இது பெரும்பாலும் சரக்குகட்டும் அல்லது மெழுகு செய்யும் பாகங்களில் பயன்படும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: