மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்

மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்

பாகம் 1 / பாடம் 10

மருந்து யந்திரம் பல வகைப்படும். மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள் மற்றும் மருந்து யந்திரம் விளக்கங்கள். மருந்து செய்ய பயன் படும் கருவிகள் விளக்கம்.


அவி யந்திரம்

அவி யந்திரம் அவி யந்திரம்

ஓர் வாய் அகலமான மண் கடத்தில் நீரையாவது, பாலையாவது, நீரும் பாலுங் கலந்ததையாவது கடத்தின் அரை பாகத்திற்குள்ளாக அடங்கும் படிவிட்டு, அக்கடத்தின் வாய்க்கு ஒர் சீலையை தளர்ச்சியாகக் கட்டி வைக்க வேண்டும்.

அதன் மீது அவிக்க வேண்டிய சரக்கு அல்லது மருந்தை வைத்து, அக்கடத்தின் வாய்க்கு பொருத்தமான சட்டியை மேலே கவிழ்த்து வாய் மூடி சீலை சுற்றி, அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிக்க வேண்டும்.

கடத்திலுள்ள நீர்மம் முக்கால் பாகம் சுண்டி வரும் வரையில் எரித்து எடுக்க வேண்டும். இதுவே அவி யந்திரம் எனப்படும்.


துலா யந்திரம்

துலா யந்திரம் துலா யந்திரம்

ஓர் மண் கடத்தில் அரை பாகத்திற்குள்ளாக அடங்கும் படி குடி நீரோ, சாறு வகைகளோ அல்லது வேறு நீர்மங்களோ விட்டு அக் கடத்தின் வாயின் குறுக்கே ஓர் மூங்கிற் குச்சியை வைத்து அதன் நடுவிலிருந்து ஓர் கயிறு கட்டித்தொங்கவிட வேண்டும்.

அதன் இறுதியில் மருந்துச் சரக்கை ஓர் துணியில் முடிந்து கட்டி, பாகத்திற் கேற்றபடி அம்மருந்து திரவத்தில் மூழ்கும்படியோ, மூழ்காமல் ஆவி மட்டும் படும் படியோ, அமைக்க வேண்டும்.

கடத்தின் வாய்க்கு பொருத்தமான ஓர் சட்டிகொண்டு மூடி அடுப்பிலேற்றிச் சிது தீயாக எடுத்து எரிக்க வேண்டும்.


வாலுகா யந்திரம்


ஓர் குப்பியில் மருந்துகளைப் போட்டு, வாய்க்குப் பொருத்தமான ஓர் பலப்பக் கல்லைச் செருகி, சீலைமண் செய்து குப்பி முழுவதும் மறையும்படி வைக்கவும்.

வாலுகா யந்திரம் வாலுகா யந்திரம்

ஏழு சீலைமண் செய்து உலர்த்தி பிறகு ஓர் வாய் அகலமான மட்கடத்தில் நான்கு விரற்கடை மணலைக் கொட்டிப் பறப்பி, அதன்மீது குப்பியை வைக்கவும்.

கழுத்தளவு மணல் கொட்டிப் பறப்பி, அடுப்பிலேற்றி முறைப்படி எரித்து பின்பு குப்பியிலுள்ள மருந்தை எடுத்துக் கொள்வதாம். சில முறையகளில் குப்பியின் வாயை மூடாமல் வைத்து எரிப்பது முண்டு.

மற்றும் ஓர் அடி கனத்த மட்கடத்தின் அடிபாகத்தில் குப்பி நுழையக்கூடிய ஓர் துவாரம் செய்து மருந்து செலுத்தி சீலைமண் செய்து வைத்துள்ள குப்பியை மருந்துள்ள பாகம் வரையில் சட்டியின் துவாரத்தில் நுழையும்படிச் செய்யவும்.

சந்துக்கு மண்பூசி உலர்த்தி, குப்பியின் கழுத்தளவு வரையில் மண்கொட்டிப் பரப்பி, வாயை மூடியும் மூடாமலும் எரித்தெடுப்பது முண்டு.


பதங்க யந்திரம்

பதங்க யந்திரம் பதங்க யந்திரம்

வாய் அகலமாயும், பொருத்தமாயும் உள்ள இரண்டு மட்பாண்டங்களை ஒன்றில் பதங்கிக்க வேண்டிய சரக்குகளைப் போட்டு மற்றொரு பானையில் மூடி பொருந்து வாய்க்கு சீலை மண் செய்து உலர்த்தி அடுப்பிலேற்றவும்.

முறைப்படி எரித்து ஆறின பின்பு மேற் பானையின் உட்பாகத்தில் பதங்கமானது படிந்திருக்கும்,

இதனை சுரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில முறையகளில் மேற்பானையின் உட்புறத்தில் மூலிகைச் சாறை மும் முறைப் பூசி உலர்த்தி சித்தப்படுத்தியதை மூடி எரித்தெடுப்பது முண்டு.

இம்மாதிரி செய்வதனால் பதங்கம் வீணாகாமல் நன்கு படிந்திருக்கும்.


தீநிர் யந்திரம்


வாய் அகலமான ஓர் பெரிய மண் கடத்தையும் அதனுள்ளே நுழையும் படியான ஓர் பீங்கான் கோப்பைக் கிண்ணத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

மட்கடத்தின் உள்ளே நடுவில் ஒரு சதுரமான செங்கல் துண்டை ஆடாமல் வைத்து அதன் மீது பீங்கான் கிண்ணத்தை வைத்து கோப்பையைச் சுற்றி மருந்துகளை கிண்ணத்தின் மட்டத்திற்கு கீழாகவே உள்ளபடி போட்டு மண் கடத்தின் மீது ஒரு சிறு மண் குடத்தை நேராக வைத்து பொருத்து வாய்க்கு சீலை அல்லது மண் சீலையைச் சுற்றி அசையாமல் அடுப்பிலேற்றவும்.

மேல் பானையில் நீர் விட்டு எரித்து ஆறின பின்பு மேல் பானையை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் பீங்கான் கிண்ணத்தைப் பார்க்க அதில் தீநிர் யந்திரம் இறங்கியிருக்கும். இதுவே தீநிர் யந்திரமாகும்.


வாலை மருந்து யந்திரம்

வாலை யந்திரம் வாலை யந்திரம்

வாலை யொன்று செய்து அதன் வாய்க்குப் பொருத்தமான வாயுள்ள ஓர் மட்குடத்தை சேகரித்து அம்மண் குடத்தில் அம்மருந்துகளைப் போட்டு வைக்க வேண்டும்.

வாய்க்கு வாலையைச் சொருகி பொருந்துமிடத்தில் மண்பூசி சீலை மண் வலுவாக செய்து வைத்துக் கொள்க.

வாலையின் இரண்டு புறங்களிலும் இரண்டு குழைகள் காணப்படுவதில் ஒன்று வாலையின் உட்புறத்திலிருந்து எண்ணை அல்லது தீநிர் வருவதற்காகவும், மற்றொன்று மேல் புறத்திலுள்ள குளிர்ந்த நீரை வெளிப்படுத்துவதற்காகவும் உள்ளது.

ஆகவே தீநிர் வரக் கூடிய குழையினின்று தீநிரை சேகரிக்கும் பொருட்டு ஓர் நீண்ட தகரம் அல்லது கண்ணாடி குழாயை சொருகி அதன் இருதியில் ஓர் சீசாவை வைத்து அதில் தீநிர் வந்து விழும்படியாக அமைக்கவும்.

வாலையின் மற்றொரு குழாயில் நீர் வெளியாகாத வண்ணம் ஓர் சடை கார்க்கை அடைத்தும் வாலையின் மேல் பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அசையாமல் அடுப்பிலேற்றி எரித்துவரவும்.

இவ்வாறு எரித்து வரும் போது வாலையின் மேல் பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீர் சூடானதாகத் தெரிந்தால் உடனே அதை வெளியாக்கி விட்டு மறுபடியும் குளிர்ந்த நீரை ஊற்றிவைக்கவும்.

இப்படி எரிக்கும் போது பானையிலிட்ட மருந்தானது ஆவியாகி மேலெழும்பி குளிர்ச்சீயினால் நீராகி வாலையின் மற்றொரு குழையின் வழியாய் யிறங்கி சீசாவில் வந்து விழும்.

இவ்வாறு மருந்து கிடைக்கும் வரையில் எரித்து எடுக்கவும். இது ஓமத்தீநிர், மைனத்தைலம் முதலியன செய்ய உதவும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: