உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதற்கான பயன்கள்

உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதற்கான பயன்கள்

உடற்பயிற்சி உடல் நலத்திற்கு பெருமளவில் நன்மை விளைவிக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.  நன்றாக இந்த உண்மை தெரிந்து இருந்தாலும், நடக்கவே இயலவில்லை என்னால் எப்படி உடற்பயிற்சி செய்வது? என வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களும் கருதுவது உண்டு.

இப்படி வயது முதிர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களும் எந்த வித உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் அதற்கான நன்மைகளை எப்படி அவர்களுக்கு வழங்குவது என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அவர்கள் உடலில் இயற்கையாக கிடைக்கும் சிஸ்டரின் என்கிற புரத பொருளை ஆய்வு மேற்கொண்டதில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதற்கான பலன்கள் கிடைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் இதன் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எந்தவித உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் உடற்பயிற்சிக்கான பலன்களை மட்டும் முழுமையாக அனுபவிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

முனைவர் மையும் ஜிம் கிம் கூறும்பொழுது ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மூலம் சிஸ்டரின் என்கிற புரதம் உடற்பயிற்சியின்போது தசைகளுக்கு இடையே கூடி படிவதாக கண்டறிந்துள்ளனர்.

இவர் துணைப் பேராசிரியராக மூலக்கூறு மற்றும் உடலியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த புரதம் குறித்து மேற்கொண்டு தனது ஆய்வுகளை நடத்தியது. இதற்காக டிரோசோபிலா எனும் பழப்பூச்சி ஈக்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த ஆராய்ச்சிக்காக பழப் பூச்சிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி பூச்சிகள் ஆய்வு கண்ணாடிக் குடுவைகளில் ஏறுவதற்காக பழங்கப்பட்டன. இவ்வாறு அவை நாள்தோறும் ஏறி பழகியபோது அவற்றில் செஸ்டரின் புரதம் பெருமளவு தசைகளில் படிந்தது. மற்ற பழப்பூச்சி குழுவில் அந்த செஸ்டரின் புரதம் தசைகளில் படியாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் பூச்சிகளுக்கு இடையே ஆய்வு மேற்கொண்ட பொழுது சிஸ்டரின் புரதம் கொண்ட பூச்சிகள், செஸ்டரின் இல்லாத பூச்சிகளை ஒப்பிடுகயில், மிக எளிதாக உடற்பயிற்சிகளை கூடுதல் நேரம் மேற்கொள்ள இயன்றது.

அதற்குப்பின் சிஸ்டரின் இல்லாத பூச்சிகளுக்கு சிஸ்டரின் புரதம் செயற்கையாக செலுத்தப்பட்டு அவற்றின் திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாக இந்த புரதம் செலுத்தப்பட்டதோ, அதற்கு ஏற்ப உண்மையில் உடற்பயிற்சி மேற்கொண்ட பூச்சிகளை காட்டிலும் திறம்பட இவற்றால் செயல்பட முடிந்தது.

ஆக, உடற்பயிற்சியை மேற்கொள்ள இயலாத ஒருவருக்குக்கூட இந்த சிஸ்டரின் புரதம் செயற்கை முறையில் செலுத்தப்பட்டால்,  அவருக்கு உடற்பயிற்சி மேற்கொண்ட அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நன்றி மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு

Share this Post:

தொடர்பான பதிவுகள்: