சட்டத்திற்கு புறம்பான செயல்: இலங்கையை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு சிறை

சட்டத்திற்கு புறம்பான செயல்: இலங்கையை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு சிறை

இலங்கையை சேர்ந்தவர் முகமது ரிபாஸ் (வயது 36). இவர் கடந்த 2004-ம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை தேடி துபாய் சென்றார். அங்கிருந்து 2009-ல் சுற்றுலா நுழைவு சீட்டு மூலம் சென்னை வந்தார். அங்கு அவர் துணிக்கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு தற்போது மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.  கீழக் கரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக ரிபாஸ் உள்பட 4 பேரை கியூபிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் நேர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஏப்ரல் திங்களில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குழு தொடங்கி கிருத்துவர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக பரப்புரை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்களை சட்டத்திற்கு புறம்பாக அனுப்பி வந்தார் எனவும் கூரப்படுகிறது.

இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இதையடுத்து, இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.

அந்த உறுதிமொழி ஆவணத்தை மறைத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை மூலம் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப மானிய சிறப்பு திறன் அட்டை (ரேசன் சுமார்ட் அட்டை), ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து இந்திய அரசு ஆவணங்களும் பெற்றூ அரசு சலுகைகள் அணைத்தும் பெற்றார்.

இது குறித்து அறிந்த காஞ்சிரங்குடி ஊர் மேலான்மை அலுவலர் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நன்னடத்தை பிணைய காலமான 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க கீழக்கரை வட்டாட்சியர் வீரராசு ஆணையிட்டார்.

இந்தநிலையில் கன்னியா குமரி மாவட்டத்தில் சிறப்பு காவல் சார் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வில் கைதான அப்துல் சமீம் என்பவர் கடந்த அக்டோபர் திங்களில் கீழக்கரைக்கு வந்து முகமது ரிபாசை சந்தித்து விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்துல் சமீம், கீழக்கரை பகுதியில் வேறு யாரை சந்தித்து சென்றுள்ளார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: