"பொங்கல் இசுலாத்திற்கு எதிரானது" - மலேசிய அரசின் சுற்றறிக்கை

"பொங்கல் இசுலாத்திற்கு எதிரானது" - மலேசிய அரசின் சுற்றறிக்கை

பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அனுப்பியது அங்கு வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக இருந்தது.

பொங்கல் திருவிழா தமிழர்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு - 2020 சனவரி 13 ஆம் நாளிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலே தமிழர் திருவிழாக்களில் இசுலாமியர் பங்கேற்பது கூடாது என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மலேசியா முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களுக்கு சீனர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக லாந்தர் விளக்குகளை வைக்கக்கூடாது என அண்மையில் இசுலாமிய தரப்பினர் வலியுறுத்தினர்.

அதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் யாரும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டாம் என்று மத போதகர் ஜாகிர் நாயக்கின் பழைய சமூக ஊடகப் பதிவு சமூக ஊடகங்கள் வாயிலாக மலேசிய இசுலாமியர்களுக்கு பரப்பப்பட்டது.

சுற்றறிக்கையைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள மலேசியக் கல்வித் துறை, இஸ்லாமிய வளர்ச்சித் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கூடி கலந்துரையாடியதாகவும், அதில் பொங்கல் விழா இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக்கூடாது என முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜீப்பின் ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அரசாங்கத்தின் ஆதரவுடன் "ஒரே மலேசியா பொங்கல் விழா" (SATU MALAYSIA PONGAL) கொண்டாடப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டது. மலாய்க்காரர்கள், சீனர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: