குடியுரிமை திருத்த சட்டம்: எளிய விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டம்: எளிய விளக்கம்

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு அடிப்படை தகுதியாக்கி குடியுரிமை திருத்த சட்டம் டிசம்பர் 10, 2019 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இசுலாமியர் அல்லாதோர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.

இந்திய அரசின் சட்டத்திற்கு எதிரானது என்ற குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாகாதவாறு, அவர்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்கும்.

போராட்டங்களும் கலவரங்களும்:

இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.

அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதரீதியிலான பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

வடகிழக்கு மாநிலங்களில், போராட்டம் நடப்பது எதன்னல் என்றால், இந்த சட்டத்தின் மூலம் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அந்த பழங்குடி பகுதிகளில் குடியேற வாய்ப்பை இந்த சட்டம் ஏற்படுத்தும் என்பதால்.

இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆகியோர் இலங்கையில் சிறுபான்மை மதமாக உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனும்போதும் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தியாவில் வாழும் இசுலாமியர்களை விரட்டி அடிக்க இந்த சட்டமா?

என்.ஆர்.சி. என்று பரவலாக அறியப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அச்சாம் மாநிலத்தில் நடைமுறைக்கு வந்தபின் அங்கு 19 லட்சம் இசுலாமியர்கள் சட்டத்திற்கு புறம்பான குடியேறிகள் என்று கூறி அவர்களின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டது.

பலர் தற்பொழுது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர் என்று குடியுறிமை உறுதிபடுத்த என்ன ஆவணம் வேண்டும்?

தாங்கள், அல்லது தங்களின் பெற்றொர் அல்லது அவர்களின் பெற்றோர் இந்த மண்ணில் 1971-க்கு முன் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்று வேண்டும்.

கோரப்படும் சான்றுகளில் ஏதேனும் ஒன்று 1971-க்கு முன் பெறப்பட்ட:

1.  அரசின் மக்கள் நல்வாழ்வு துறை வழங்கிய பிறப்பு சான்றாகவோ அல்லது

2.  நிலம் புலம் வைத்திருந்த ஆவணமாகவோ அல்லது

3.  கல்வி பயின்றதற்கான பல்கலைகழகம் அல்லது கல்வி இயக்குனகரகம் வழங்கிய சான்றாகவோ

இருத்தல் வேண்டும்.

இந்த சான்று கணவன் மனைவி என்றாலும், இருவரும் தனித்தனியாக அதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

ஒருவரின் உறவினர் சான்று வைத்துள்ளார் என்பதற்காக குடியுறிமை கோர இயலாது.

மேலும், இந்தியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த சட்டத்தினால், இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள், தங்களுக்கு வளங்கப்பட்டுள்ள இந்திய குடியுரிமை போராடி தாங்கள் பெற்றது என்ற மன நிலையை ஏற்படுத்தும் என்பது தின்னம்.  தாங்கள் இந்தியர்கள் தாம் என்ற சிந்தனையை வலுவாக மனதில் ஏற்ற உதவும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: