தவளையின் உயிருள்ள அணுக்களை எடுத்து வாழும் எந்திரன் வடிவமைப்பு

தவளையின் உயிருள்ள அணுக்களை எடுத்து வாழும் எந்திரன் வடிவமைப்பு

புத்தகங்கள் காகிதங்கள் மரத்திலிருந்து செய்யப்படுகின்றன... அதற்காக புத்தகங்கள் மரம் அல்ல!!!

உயிருள்ள தவளையின் அணுக்களில் இருந்து ஒரு புது வடிவமான உயிரோட்டமுள்ள ஒரு சிறிய எந்திரனை அறிவியலாளர்கள் வடிவமைத்துள்ளனர் இந்த எந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் அங்கு செய்ய வேண்டிய பணிகளை செய்துவிட்டு மேலும் அங்கே பாதிப்படைந்தால் தன்னை தானே சரி செய்து கொண்டு தன் வேலையை முழுமையாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது இதை எந்திரன் என்று சொல்வதைவிட ஒரு உயிருள்ள புதிய மிருகம் வகை என்று சொல்வதைவிட கலையால் வடிவமைக்கப்பட்ட உயிருள்ள அல்லது உயிரோட்டமுள்ள ஒரு புதிய இனம்

அறிவியலாளர்கள் தவளையின் கரு அணுக்களை எடுத்து அதன் மூலம் ஒரு புதிய வாழும் தன்மை கொண்ட ஒரு உயிரியை வடிவமைத்துள்ளனர்.

இன்றைய மருத்துவ சூழலில் ஒரு மனித நோயாளிக்கு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட மருந்தை உடலுக்குள் வைக்கவேண்டும் என்றால் ஒன்று அவர் உடலில் அறுவை மருத்துவம் செய்ய வேண்டும் அல்லது நீளமான குழாய் போன்ற ஏதாவது ஒன்றை செலுத்த வேண்டும் அப்படியும் இல்லை என்றால் நீண்ட கூர்மையான ஊசியை உடலினுள் செலுத்த வேண்டும்.

இதனால் பெருமளவு உடல் வலியும் பக்கவிளைவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதற்கு மாற்றாக அறிவியலாளர்கள் மிகச்சிறிய எந்திரங்களை வடிவமைத்து முயற்சிகள் பல செய்து வந்தனர். இருப்பினும் அவற்றால் துல்லியமாக மருந்தை மருந்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்க இயலாமல் போனது. இதற்கு பெரும்பாலும் அதை உடலினுள் செலுத்தப்பட்ட பின் பழுதடைவதே ஆகும்.

இதற்குத் தீர்வாக அறிவியலாளர்கள் உயிருள்ள அணுக்களை கொண்டு சின்னஞ்சிறு எந்திரன் அதாவது சுமார் ஒரு மில்லி மீட்டர் அளவே கொண்ட வாழுகின்ற எந்திரனை வடிவமைத்துள்ளனர் இதை ஒரு தனி உயிர் என்று சொல்ல இயலாது. இது தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளின்படி மட்டுமே செயல்படும். உடலுக்குள் செலுத்திய பின் பழுதானால் தன்னைத் தானே சரி செய்து கொள்கிற திறன் இருக்கும்.

இதுகுறித்து ஆய்வாளர் லெவின் கருத்துரைக்கும் பொழுது "இந்த புதிய உயிரினம் முழுக்கமுழுக்க தவளையின் அணுக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் அது தவளை தான் என்றாலும் செயல் வடிவில் இது தவளை அல்ல. இது ஒரு போதும் புதுவகையான ஒரு வாழுகின்ற இனம்"

இத்தகைய புதிய வாழுகின்ற இனங்கள் பிற்காலத்தில் மனித உயிருக்கு அச்சுரத்தலை ஏற்படுத்தி விடாதா என்ற வினாவிற்கு மனைவர் லெவின்ன் அவர்கள் "மனித இனம் மேலும் இந்த மண்ணில் வாழ போகிறது என்றால் பலவகையான புத்தம் புதிய கண்டுபிடிப்புகளும் அதுதொடர்பான மேற்கொண்டு ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும் அது தவறு மேயானால் அதனால் மனித இனத்திற்கு பெரும் தீங்கு விளையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை" என்றார்.

மேலும் அவர் கூறும் பொழுது "தானியங்கி கார்கள் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த ஊழியில், தானியங்கி மருந்து வழங்கும் உயிரினங்கள் வடிவமைக்கப்படுவது ஊழியின் கட்டாயம்" என கருத்துரைத்தார்.

இந்த ஆய்வு வெர்மான்ட் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: