இந்தி நடிகை விபத்தில் படுகாயம், நலமடைய முதன்மை அமைச்சர் மோடி மன்றாட்டு

இந்தி நடிகை விபத்தில் படுகாயம், நலமடைய முதன்மை அமைச்சர் மோடி மன்றாட்டு

மும்பை அருகே காரி (சனி) கிழமையன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூத்த இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி பலத்த காயமடைந்தார்.  

மும்பை - புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், காரி கிழமை மாலை விபத்துக்கு ஆளானது. கார், சரக்குந்தில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை மீட்ட முதலுதவி குழுவினர், மும்பாய் அருகே உள்ள ரைகட் மாவட்டத்தின் பன்வேல்  பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷபனாவை அனுமதித்தனர்.

அவருக்கு அங்கே மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்  சாலை விபத்தில் படுகாயமடைந்த பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விரைவில்  நலமடைய கடவுளை கெஞ்சி மன்றாடி வருவதாக முதன்மை அமைச்சர் மோடி தனது டுவிட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

இன்று காலை அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், "ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்துள்ள செய்தி மிகுந்த மண வேதனை அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டி வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Share this Post:

தொடர்பான பதிவுகள்: