செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவிற்கு நன்மை விளைவித்த மலேசிய முதன்மை அமைச்சரின் பேச்சு

இந்தியாவிற்கு நன்மை விளைவித்த மலேசிய முதன்மை அமைச்சரின் பேச்சு

மலேசிய முதன்மை அமைச்சர் மகாதீர் முகம்மத் அவர்கள், காஷ்மீர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்றும் விதமாக சட்டத்தை மாற்றியது குறித்து இந்தியா விரும்பாத பல கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தார்.

இந்தியா தற்போதைய அளவில் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டன் அளவு பனை எண்ணையை பிற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது. இதில் 3 மில்லியன் டன் அளவிற்கான எண்ணெய் மலேசியாவிலிருந்து மீதமுள்ளவை இந்தோனேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மலேசியாவில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் இந்தோனேஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் எண்ணெய் முழுவதும் தூய்மை படுத்தப்படாத நிலையிலேயே பெறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இந்தியா, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட பனை எண்ணெய்க்கான இறக்குமதி வரியை, இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் கீழ், 50 விழுக்காடு இருந்து 45 விழுக்காடாக குறைத்தது.

மேலும் தூய்மை படுத்தப்படாத எண்ணெய்க்கான வரியை 10 லிருந்து 5 விழுக்காடாக குறைந்தது.

இந்த வரி குறைப்பு நடவடிக்கைகளால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு 38 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது.

இதனால் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எண்ணை தொழிலும் கடுமையான இக்கட்டிற்கு ஆளாகினர்.

இந்தியாவின் உள்ளூர் பனை எண்ணெய் உற்பத்தி சந்தை கடும் பாதிப்பை எதிர்கொண்டது.

இறக்குமதி வரி குறைப்பால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதிப்பை நேர் செய்யும் விதமாக, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான வரியை 5 விழுக்காடு அளவிற்கு அரசு உயர்த்தியது. அதனால் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான விலையும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான விலையும் ஓரளவு ஒத்துப்போகுமாறு அமைந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் மலேசிய முதன்மை அமைச்சர் அவர்கள், இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்மறையான கருத்தை 74வது ஐக்கிய நாடுகள் அவையில் தனது உரையின் போது எடுத்துரைத்தார்.

அவர் உரையாற்றி முடித்த உடனேயே இந்தியாவில் செயல்படும் உணவு எண்ணெய் இறக்குமதி நிறுவனங்கள் கவலை அடைந்தனர்.

மோடி தலைமையிலான அரசு மகாதீரின் குற்றச்சாட்டுக்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடும் மனநிலையில் இல்லை. அதை கருத்தில் கொண்டு எண்ணை தொழில் நிறுவனங்கள் எச்சரிக்கையாக செயல்படத் துவங்கின.

மலேசிய முதன்மை அமைச்சர் இந்தியா குறித்து எதிர்மறையான நிலையை எடுத்தது இந்திய சந்தையில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறக்குமதியாளர்கள் மலேசியாவை தவிர்க்க முடிவு செய்தனர்.

ஆனால் இந்திய அரசு, சந்தை எதிர்பார்த்தபடி மலேசியாவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மலேசியாவிலிருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதியை துவக்கினார்.

இதற்கிடையே இந்த ஜனவரி திங்களில் மலேசியாவும் இந்தோனேசியாவும் தங்களது நாட்டு ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர் இதனால் தூய்மைப்படுத்தப்பட்ட எண்ணெய்க்கும் தூய்மைப்படுத்தப்படாத எண்ணெய்க்குமான விலை வேறுபாடு வெறும் 2.5 விழுக்காடு அளவிற்கு அமைந்தது.

மோடி தலைமையிலான அரசு மலேசிய முதன்மை அமைச்சரின் பேச்சுக்கள் தொடர்பாக தனது அமைதி போக்கை தொடர்ந்து வந்த நிலையில் மகாதீர் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பேசத் துவங்கினார்.

இந்தமுறை சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் புகுந்துள்ள வெளி நாட்டவரை வெளியேற்றும் சட்டத்திற்கு எதிராக தனது கருத்தை பதிந்தார்.

எரிச்சலடைந்த மோடி அரசு உடனடி நடவடிக்கையாக இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய், கட்டுப்படுத்தப்பட்ட பொருள் பட்டியலில் சேர்தது.

இதன்விளைவாக உள்ளூர் பனை எண்ணெய் விதைகள் உற்பத்தி செய்யும் உழவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கள் உற்பத்திக்கான விலை உயர்வை பெற்றனர்.

உள்ளூர் எண்ணெய் விதை உழவர்களை பொருத்தவரை, இந்திய அரசு தொடர்ந்து மலேசியாவிலிருந்து எண்ணெய் உணவு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்தால், உள்ளூர் உற்பத்தி பெருகி உணவு எண்ணெய் சந்தையானது முழுமையாக உள்ளூர் கட்டுப்பாட்டில் இயங்கும்.

அதனால் உள்ளூர் வருவாய் பெருகுவதுடன் இறக்குமதிக்கான வெளிநாட்டு பணம் வீணாவதும் கட்டுப்படுத்தப்படும்.

மொத்தத்தில் மகாதீர் முகமதுவின் தேவையற்ற பேச்சு இந்தியாவின் உள்ளூர் உழவர்களுக்கு நன்மை பயத்திருக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: