ரயில்வே துறை என்பதெல்லாம் ரயில்வே துறையினுடையது அல்ல

ரயில்வே துறை என்பதெல்லாம் ரயில்வே துறையினுடையது அல்ல

"வெளுத்ததெல்லாம் பாலல்ல" என்பார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அரசுத்துறைகள் போன்று தமது இணையதளங்களை வடிவமைத்துக் கொண்டு, அரசுத் துறை வழங்கும் தொண்டுகளை தாம் வழங்குவதாக சொல்லி காசு ஏமாற்றும் கயவர்கள் உலா வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவின் ரயில்வே துறை நாளொன்றுக்கு சுமார் 1.6 மில்லியன் மக்களுக்கு தனது தொண்டாற்றி வருகிறது.

மேலும் சுமார் ஒரு மில்லியன் அளவிற்கான மக்களுக்கு சுற்றுலா அமைத்துக் கொடுக்கும் தொண்டையும் ஆற்றிவிடுகிறது.

ரயில்வே துறை இதற்காக ஐ ஆர் டி சி என்கிற இணையதளத்தை நடத்திவருகிறது.  இந்த  ஐ ஆர் டி சி என்கிற இணையதளத்தை போன்ற எழுத்து அமைப்புகள் கொண்ட பல இணையதளங்கள் இணையத்தில் பதியப்பட்டுள்ளன.

இத்தகைய போலி தளங்களில் பல இந்திய ரயில்வே துறையின் தொண்டுகள் குறித்து விளக்க உரைகள் தந்து மக்களுக்கு நன்மை செய்தாலும் சில தீய எண்ணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறையினரது விற்பனை குறியீடு குறிப்புகளை பயன்படுத்தி, அவர்களது இணையதளத்தை ஒத்த வடிவமைப்பைக் கொண்டு தமது தளங்களை அமைத்து அதன் மூலம் போலியாக சுற்றுலா தொடர்பான தொண்டுகளை விற்பதும் மேலும் ரயில்வே பயணச்சீட்டு விற்பது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே துறையினரிடம் வினவியபோது அவர்கள் தமது துறை எந்த பயனர் இடமும் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது இல்லை என்றும், எவ்வகையிலும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பி தனிப்பட்ட தகவல்கள் பெறுவது இல்லை என்றும், வங்கி அட்டைகள், வங்கி தொடர்பான பரிமாற்ற குறிப்புகள், ஆதார் அட்டை தகவல்கள் போன்றவற்றை தமது துறை எவ்வகையிலும் யாரிடமும் கேட்டுப் பெறுவதில்லை என்றும் பொதுமக்கள் யாரும் இத்தகைய மோசடி கும்பலிடம் தனிப்பயன் தகவல்கள் கொடுத்து ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

IRCTC என்று துவங்கும் அல்லது பெயர் கொண்ட இணையதளங்கள் எல்லாம் இரயில்வே துறையினரது அல்ல என்ற எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

"irctc.co.in" என்ற தளம் உண்மையானது. அதே வேளையில் "irctctour.com" என்கிற தளம் போலியானது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: