அமேசான் தலைவரின் கைபேசியில் புகுந்த சவுதி இளவரசர்

அமேசான் தலைவரின் கைபேசியில் புகுந்த சவுதி இளவரசர்

அமேசான் நிறுவனத்தை நிறுவியவர் பிசோஸ். தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தில் வல்லுனர்களுக்கு எல்லாம் வல்லுநர் இவர். இணையத்தில் தகவல் திருடுபவர்களின் முன்னோடிகளுக்கு எல்லாம் முன்னோடி.

அதாவது இணையத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை யாரும் உணராத வகையில் திரட்டுவது என்பது இவர் நிறுவிய அலெக்சா நிறுவனத்திற்கு கைவந்த கலை.

இத்தகைய சிறப்புகள் உடைய ஜெப் பிசோஸ் அவர்களின் கைபேசியை யாரோ ஒருவர் இடை புகுந்து தகவல் அனுப்பி, ஊடுருவி பல தகவல்களை திரட்டி உள்ளார்.

இதனால் இவர் தன் மனைவியை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது தான் வருத்தமான செய்தி.

பிசோஸ் அவர்களும் சவுதி இளவரசரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பல செய்திகளை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சவுதி இளவரசர் அனுப்பிய ஒரு செய்தியை பதிவிறக்கி தன் கைபேசியில் கண்டவுடன் இவரது கைபேசி தகவல்கள் எல்லாம் திருடும் மனநிலை கொண்டவரின் வழங்கிக்கு திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது.

தற்போது அமேசான் நிறுவனர் பிசோஸ், "நேஷனல் என்கொயரர்" என்கிற அமெரிக்க ஊடகம் ஒன்றை கடுமையாக இதுதொடர்பில் சாடியுள்ளார். அவர்களே இத்தகைய திருட்டு நிகழ்வில் சவுதி அரசுடன் சேர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும் என குற்றம் சாட்டுகிறார்.

மேலும் கூறும் பொழுது, கடந்த ஆண்டு மே 1ஆம் நாள் வாட்ஸப்பில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் அனுப்பிய செய்தியாக ஒரு காணொளி வந்துள்ளது. அதை பதிவிறக்கம் செய்து பார்த்தவுடன் தமது தனிப்பயன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் மூலம் தமக்கும் லெளரன் சான்சஸ் என்கிற தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கும் இருந்த திருமணத்திற்கு புறம்பான உறவு வெளிவந்தது.

இதனால் தமது 25 ஆண்டு மேக்கன்சியுடனான திருமணம் முடிவுற்றது என கூறியுள்ளார்.

மேலும் சவுதி அரசு பலரின் தொலைபேசிகளை ஊடுருவி பல தகவல்களை திருடி உள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: