செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஊழியர்கள் எல்லோரும் பான் மற்றும் ஆதார் எண்ணை பகிர வேண்டும்

ஊழியர்கள் எல்லோரும் பான் மற்றும் ஆதார் எண்ணை பகிர வேண்டும்

நிறுவனத்திடம் ஊழியர்கள் எல்லோரும் பான் மற்றும் ஆதார் எண்ணை பகிர வேண்டும்

86 பக்கங்கள் கொண்ட ஒரு சுற்றறிக்கையை நடுவன் நேரடி வரி ஆணையம், அனைத்து நிறுவனங்களுக்கும், அவர் தம் ஊழியர்களின் பான் மற்றும் ஆதார் எண் தொடர்பாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 206 ஆஆ கீழ் அனுப்பியுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின்படி, பான் மற்றும் ஆதார் எண் பகிராத ஊழியர்களிடம் இருந்து அவர்களது திங்கள் வருவாயில் 20 விழுக்காடு, வருமான வரியாக கழிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறை, ஆண்டொன்றுக்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவில் மொத்தம் பெறப்படும் நேரடி வரி வருவாயில் 37 விழுக்காடு, வருமான வரி பிடித்தம் மூலமாக அரசிற்கு பெறப்படுகிறது. ஆகவே இந்த புதிய திட்டமானது மேலும் ஊழியர்களின் ஊதியம் தவிர்த்த பிற வருவாயை கண்காணிக்க உதவும்.

வருமான வரி சட்டம் பிரிவு 206 ஆஆ கீழ், பான் மற்றும் ஆதார் எண் ஒவ்வொரு ஊழியரும், ஊதியம் பெறும் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும் வருவாயைப் பொறுத்து, 30 விழுக்காடு அளவிற்கு வரி செலுத்த வேண்டிய சூழலில் ஒரு ஊழியர் இருக்கிறார் என்றால் அதற்கு ஏற்றவகையில் பிடித்தமானது மாற்றி அமைக்கப்படும். அதாவது 30 விழுக்காட்டிற்கு மேலாக அது மாற்றி அமைக்கப்படவேண்டும்.

இந்த பிடித்தத்தில் 4% நலம் மற்றும் கல்வி வரி பிடித்தம் தவிர்க்கப்படும்.

வருமான வரித்துறையினர் மேற்கொண்ட பல ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்பில் பல வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டதால் இந்தப் புதிய நடைமுறையானது கொண்டு வரப்பட்டுள்ளது.Share this Post:

தொடர்பான பதிவுகள்: