தொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நடுவன் அரசு

தொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நடுவன் அரசு

இல்லாத முறைகேட்டை இருப்பதாகச் சொல்லி அரசியல் செய்ததால் வந்த வினை இன்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுற்று வருகின்றன.

தொழில் நடத்துவதற்கு ஏற்ற ஒரு விலையை முடிவு செய்து 2 ஜி அலைக்கற்றை யானது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே கொடுக்கப்பட்டது அந்த விலை முடிவை முறைகேடு என சொல்லி அரசியல் கட்சிகள் பல அரசியல் செய்து தமது வாக்குகளை பெருக்கிக் கொண்டனர்.

முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளாக்கப்பட்டதால் 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை ஏலம் முறையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது.   இதன் விளைவாக விற்கும் விலையைவிட கொள்முதல் செய்த விலை உயர்ந்து வேறுபட்டு நின்றது.

இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ், ஏர்செல், டாட்டா போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றாக நொடிப்பை சந்தித்து மூடு விழா கண்டன.  இதனால் பல்லாயிரக்கணக்கானோர் தமது வேலை மற்றும் வருவாயை இழந்து அல்லலுறுகின்றனர்.

தற்பொழுது வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதனால் இந்தியர்களின் சேமிப்பு பணம் அழிவதற்கு வாய்ப்பாக அமைந்து வருகிறது.

அரசு இது தொடர்பில் அதிரடி நடவடிக்கையாக, ஆண்டொன்றுக்காண உரிமை கட்டணம் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு கட்டணம் இவை இரண்டையும் முழுமையாக விட்டு விடும் நிலைக்கு வந்துள்ளது.

இன்றைய மதிப்பில் இது ஆண்டொன்றுக்கு சுமார் ரூபாய் 5 லட்சம் கோடி ஆகும்.

இதற்கு மாற்றாக 2005 ஆம் ஆண்டு பா சிதம்பரம் அவர்கள் முன்னெடுத்த எஸ்பிவி என்று சுறுக்கமாக அழைக்கப்படுகிற ஸ்பெஷல் பர்போஸ் வெஹிகில் (SPV - Special Purpose Vehicle) என்ற திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதனால், பெரிய நிறுவங்கள் தாம் மேற்கொள்ளும் சிக்கலான புதிய தொழில் முனைப்புகளில் எத்தகைய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டாலும், புதிய முன்னெடுப்பு எவ்வகையிலும் பாதிப்படையாது.

அரசு இந்த திட்டத்தின் கீழ் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சுமார் 200,000 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றையை விலை ஏதும் இன்றி ஒதிக்கீடு செய்யும்.

மேலும் 100,000 கோடி ரூபாய் மதிப்பிலான வடம் மற்றும் கட்டுமானம் அமைத்தல் தொடர்பான வரி பெறப்படாமல் அனுமதி கொடுக்கப்படும்.

மேலும் 5G ஒதுக்கீடானது அனைத்து நிறூவங்களும் விலை இன்றி ஒதுக்கப்படும்.

இதன் படி, அரசு கொடுக்கும் இந்த சலுகைகளை வோடபோன், ஏர்டெல், ரிலையன் ஸ் ஜியோ ஆகியவை தலா 31 விழுக்காடும், அரசின் பி எஸ் என் எல் 6 விழுக்காடும் பெறும்.

இந்த அரசின் சலுகைகள் மூலம் இன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்வு அடையும் என அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: