செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தலை மயிர் நரைப்பது இதனால் தானா?

தலை மயிர் நரைப்பது இதனால் தானா?

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு தலைமயிர் நரைப்பது ஒவ்வொருவரின் மன அழுத்தத்தின் விளைவே என கண்டறிந்துள்ளனர்!

எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால்,  கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின் பயனாக, எவ்வகையில் தலைமயிர் நரைப்பதை தடுக்க இயலும் என்பதற்கு வழிவகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நேரங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்புகள் குறிக்கப்பட்ட பொழுது, பாதிப்புக்கு உள்ளானவர்களின் தலைமயிர் வெளிறிப்போனது என்று பல குறிப்புகள் உள்ளது.

எடுத்துக்காட்டாக மரிய அந்தோணி, பிரெஞ்சு புரட்சியின் பொழுது சிறைபிடிக்கப்பட்ட போது, அவரின் தலைமயிர் இரவோடு இரவாக வெளிரிப் போனதாம். மேலும் சான் மெக்கெயின் அவர்கள் கூரிப்பில், வியட்நாம் போரின்போது காயமடைந்த சிறைக்கைதிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களின் தலைமயிர் வெளிரியதாக குறிப்பிட்டுள்ளார்.

தலை மயிர் நரைப்பது தொடர்பில், பல்லாண்டுகளாக குறிப்புகளில் குறிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சித்தாந்த நம்பிக்கையில் இது இருந்தாலும், அறிவியலின்படி இது என்றும் உறுதி செய்யப்படவில்லை.

தற்போதைய ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வானது இந்தக் கூற்றுக்கள் எல்லாம் உண்மை என அறிவியலின்படி உறுதிப்படுத்தியுள்ளது.

மன அழுத்தமானது முழு உடலையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
 ஆய்வாளர்கள் எந்த குறிப்பிட்ட பகுதி மயிரின் நிறத்தை மாற்றும் அழுத்தத்தைத் தருகிறது என கண்டறிய முற்பட்டனர்.

முதலில் ஆய்வாளர்கள் நோய் எதிர்ப்பு திறனே இந்த நிற மாற்றத்திற்கான அடிப்படையாக அமைகிறது என நம்பினர். இதற்காக எலியின் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாக நீக்கப்பட்டு அதற்க்கு மன அழுத்தம் கொடுக்கப்பட்டது.
 ஆனாலும் அவற்றின் மயிர் வெளிறிப் போனது.

இதனால், நோய் எதிர்ப்பு தன்மை மயிரின் நிறத்தை மாற்றுவது இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

உட் சுரப்பு நீர்கள், இந்த நிற மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என கருதி,  கார்டிசோல் உப் சுரப்பு நீரை ஆய்விற்கு உட்படுத்தி, அவையும் இந்த நிற மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.   இதற்காக கார்டிசோல் உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பியை எலியிடம் இருந்து நீக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரப்பி நீக்கப்பட்ட எலியும் மன அழுத்தத்திற்கு உட்பட்ட போது தன் மயிரின் நிறத்தை இழந்தது.

ஒவ்வொன்றின் மீதும் ஐயம் கொண்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவை இல்லை என கண்டறிந்து கடைசியாக பரிவு நரம்பு இயக்கமே இந்த நிற மாற்றத்திற்கான அடிப்படையாக விளங்குகிறது என கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தத்திற்கு உட்படும் பொழுது, மயிர்க்கால்களில் இந்தப் பரிவு நரம்பு கிளைகள் நிரோபைன் - ஃபிரைன் என்ற அமிலத்தை சுரப்பதால் நிறம் ஏற்படுத்தும் தண்டு முழுமையாக செயல் இழக்கின்றன.

நன்றி ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: