வட்டித் தொழிலில் ஈடுபடும் ரஜினிகாந்த்

வட்டித் தொழிலில் ஈடுபடும் ரஜினிகாந்த்

கந்துவட்டி கொடுமைகள் குறித்தும் வட்டியால் ஏழை எளியவர்கள் பாதிப்படைவது குறித்தும் பல கருத்துக்களை தன் திரைப்படங்களின் வாயிலாக  குரல் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாம் வட்டித் தொழிலில் 2002ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருவதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தகவல் தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறையினரால் வரிஏய்ப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தாம் 2002 முதல் வட்டித் தொழில் செய்து வருவதாக தமது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் பொழுது தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதமானது ஆண்டொன்றுக்கு 18 விழுக்காடு அளவிற்கு இருக்கிறது.  கடன் பெற்ற அனைவருக்கும் ஒரே அளவில் வட்டி விகிதம் முடிவு செய்யாமல், நபர்களுக்கு ஏற்ற வகையில் அது மாறுபடுவதாகவும் தன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த ரசினி கணக்கு காட்டியுள்ளார்.

2002ல் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வருவாயாக தனது வட்டி தொழில் மூலம் பெற்ற ரஜினி 2005-ல் தாம் அந்த தொழிலில் சுமார் 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நொடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

வருமானவரித்துறை, தாக்கல் செய்த வருமான வரி கணக்கை ஏற்பதற்கு அல்லாமல் வரி ஏய்ப்பை மேற்கொள்வதற்காக நொடிப்பு போன்ற தகவலை தாக்கல் செய்துள்ளதாக முழுமையாக நம்பியது.

ரஜினியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது தாம் வட்டித் தொழிலில் ஈடுபடுவது இல்லை என்றும் யாராவது கைமாற்றாக பணத்தை வாங்கியதற்காக ஆண்டொன்றுக்கு 18 விழுக்காடு அளவிற்கு வட்டி வாங்கி இருக்கலாம் என்ற தோரணையில் பதிலளித்தார்.

மேலும் இது தொடர்பில் கேட்ட பொழுது, வட்டிக்குப் பணம் கொடுப்பதை தொழிலாக செய்வதில்லை என்றும் தாம் நெருங்கிய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

வருமானவரிக் கணக்கில் அவர் தாக்குதல் செய்துள்ளபடி அவர் சுமார் 6 நபர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வருவாய் ஈட்டி உள்ளார்.

வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு மற்றும் எவ்வித உரிமம் இன்றி வட்டித் தொழிலில் ஈடுபட்டதற்காக அவர் மீது வழக்குத் தொடுத்தால், பின்பு அவர் தமது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வருவாய் ஈட்டியுள்ளார்  என்பதன் அடிப்படையில் தமது வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் அவர் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த தகவலில் தாம் சுமார் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் அளவிற்கு அந்தத் தொழில் நொடிப் பில் விழுந்ததாக சொல்லியுள்ளார்.

ஓசூர் பையன்:  தயவு செய்து துக்ளக் மற்றும் பெரியார் குறித்து ரசினி கூறிய கருத்துக்களை இந்த வர்வாய் கணக்கு ஏய்ப்புடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டாம்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: