போலி தகவல்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 10 லட்சம் தொழிலாளர்கள்?

போலி தகவல்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 10 லட்சம் தொழிலாளர்கள்?

இந்தியாவின் பொருளாதார முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் நடுவண் அரசு பல திட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வழங்கிவருகிறது.

தொழிலாளர் வைப்பு நிதிக்காக அரசு சுமார் 7500 கோடி ரூபாய் அளவிற்கு தனியார் நிறுவனங்களில் இரண்டாயிரத்தி 16 ஆண்டுக்குப்பின் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு துவங்கி அவர்களுக்கு வழங்கியுள்ளது.

அரசின் நோக்கம் தொழிலாளர்கள் நலமும் நிறுவனங்களின் வளர்ச்சியும் என்றிருக்க பல தொழிலாளர்களும் நிறுவனங்களும் தகவல்களை மறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நலத் திட்டத்தில் மோசடிகள் பல நிகழ்வதை உணர்ந்த நடுவண் அரசு 2017ஆம் ஆண்டில் புதிய திட்டத்தில் பயன் பெறும் தொழிலாளர்கள் அனைவரும் தமது ஆதார் எண்ணை இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற சட்ட நடைமுறையை கொண்டு வந்தது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் ஒரு கோடியே 20 லட்சம் தொழிலாளர்களில் சுமார் 9 லட்சம் பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி மேலும் பல தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் நுணுக்கமான முறைகேடு வழிகளை பின்பற்றி முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என புதிய தடுப்பு வழிமுறைகளை அமைத்து வருகிறது.

முறைகேட்டில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் இருந்து சுமார் 222 கோடி ரூபாய் அளவிற்கு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் நிறுவன உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் வினவியபோது தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும், தேவையில்லாமல் நடுவணரசு அப்பாவிகளிடம் தண்டத் தொகை வசூலித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: