கணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்

கணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்

கணவாய் மீன், தனது மேற்புற உடல் நிறத்தையும், வடிவத்தையும், சூழலுக்கு தக்கவாறு அதற்கு ஒப்ப மாற்றி அமைத்து முழுமையாக தனது இருப்பை மறைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

கணவாய் மீன், தனது நிறத்தையும் வடிவத்தையும் எப்படி நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துக்கொள்கிறது என்பதன் கமுக்கம் குறித்து அறிவியலாளர்கள் பல ஆய்வுகளை நடத்தி வந்தனர்.

ஆய்வாளர்கள் அதன் கமுக்கத்தை கண்டறியும் விதமாக, காந்த ஒத்திசைவு படப்பிடிப்பு (MRI) முறை மூலம், கிட்டத்தட்ட அதன் அடிப்படையை புரிந்து கொண்டுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மூளை கல்வி நிறுவனத்தின் முனைவர் வென் சுங் சங் மற்றும் பேராசிரியர் சஸ்டின் மார்சல் ஆகியோர் மேற்கொண்ட 50 ஆண்டு ஆய்வில் ஆய்வில் கணவாய் மீனின் நிறம் மற்றும் வடிவ மாற்றும் கமுக்கத்தின் அடிப்படையான நரம்பியல் தொடர்பை தொகுப்பாக்கியுள்ளனர்.

மீனின் மூளை முழுமையாக ஆராயப்பட்டு, அதன் தன்மை மாற்றும் திறன் 60 விழுக்காடு அளவிற்கு மீனின் பார்வையிலும் மூளையின் இயக்கு பகுதியிலும் அமைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன் வகைகள் நாய்-க்கு ஒத்த அறிவாற்றல் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கணவாய் மீன் நிரம் கண்டறியும் குறைபாடு இருப்பினும், அதன் நிறத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைப்பதால், அவை பார்வையை மட்டும் சார்ந்து செயல்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை மீன்களின் மூளையில், சுமார் 500 மில்லியன் அளவிற்கு நரம்பணுக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆராய்சியாளர்கள், இந்த புதிய ஆய்வு முடிவானது மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு அடிப்படை தகவலாக அமையும் என கருதுகின்றனர்.

நன்றி குயின்ஸ்லாந்து மூளை கல்வி நிறுவனம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: