பல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு?

பல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு?

பல்லியின் வால் துண்டானால், அது எவ்வகையில் கவலை கொள்ளாமல் வாலை தன்ந்தனியே துடிக்க விட்டு விட்டு, தப்பி ஓடி விடும்.

அதே போன்று நீரில் வாழும் அச்சலோற்றல் என்கிற உயிர் இனமும், மண்டையில் பாதி போய் விட்டாலும், மூளையின் பாதி போனாலும், உடல், கை, கால் என எது போனாலும் கவலை கொள்ளாது.  உயிரை மட்டும் காத்துக்கொள்ள இடத்தை விட்டு முதலில் நகர்ந்து விடும்.

ஆக, இந்த இரு உயிர் இனங்களும் துண்டான தனது உடல் பகுதிகளை சில நாட்களில் வளர்த்துக்கொள்ளும் திறன் உள்ளவை.

யேல் பல்கலை கழகத்தின் மூலக்கூறியல், உயிர் அணுக்களியல் மற்றும் வளர்ச்சிசார் உயிரினங்கள் துறையில் பேராசிரியர் சான் சி. மெலோன் மற்றும் அவரது முது நிலை ஆராய்சி மானவர் பார்கெர் பிளவர்ஸ் இது தொடர்பில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்களது கூற்றுப்படி, இந்த இரு உயிர் இனங்களும் தான் இழத்த உறுப்பை மீண்டும் மீட்டமைக்கின்ற மரபியலை மனித இணம் கண்டறியுமேயானால், மனிதர்கள் தமது பாழ்பட்ட அல்லது சிதைந்த உறுப்புக்களை தாமே வளர்த்து வடிக்க இயலும் என கருத்துறைக்கின்றனர்.

இந்த உயிர் இனங்களின் மரபனுக்கள் மிகுந்த சிக்கல் வடிவம் கொண்டுள்ளதாலும், அவை பிகப் பெரிய வடிவம் கொண்டவையாக இருப்பதாலும், பல அடுக்கு முறை கொண்டு ஆராந்து வருகின்றனர்.

மேலும், இந்த ஆராய்சியாளர்கள், மனிதர்களுக்கும் இத்தகைய மரபணு சிறப்புகள் இருக்கும் என்றும், ஆனால் பல ஊழிகள் கடந்ததால் அவை பயன்படுத்தப்படாமல் செயல் இழந்த நிலையில் இருக்கும் எற்றும் கருதுகின்றனர்.

நன்றி யேல் பல்கலை கழகம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: