நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு திடீர் திருமணம்

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு திடீர் திருமணம்

நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் தற்போது இருப்பவர் யோகிபாபு 34 வயதான யோகிபாபு ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். இன்று காலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள புகைப்பட செய்திக்குறிப்பில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணும், தானும், இன்று 05.02.2020 காலையில் தமது குல தெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவர் ட்விட்டர் மூலம் விடுத்துள்ள இந்த செய்திக்குறிப்பு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இவர் ஏன் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்துகொண்டார்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

சிலரோ திருமண விருந்து எப்போது? என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக யோகிபாபு ட்விட்டர் பதிவில், அடுத்த திங்களில் அதாவது மார்ச் திங்களில், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வதற்கு முன் அவர் முருகர் கோவில்களுக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் நடித்த தர்பார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு, ரஜினி அவர்கள் தனது திருமணம் விரைவில் நடைபெறும் என அருள் வழங்கியதாக கூறியிருந்தார்.

யோகி பாபுவின் திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: