இந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்

இந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து போன்ற இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் குரோம் நா நச்சுயிரி போன்ற பிற நச்சுயிரிகள் வவ்வால் மூலம் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவிலும் மேலும் இந்தியா உள்பட பிற நாடுகளிலும் கரோனா நச்சுயிரி தாக்குதல் குறித்த அச்சம் மக்களிடையே மற்றும் மருத்துவர்கள் இடையே நிலவி வரும் நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் எபோலா நச்சுயிரி சார்ஸ் நச்சுயிரி குர்ஆனோ நச்சுயிரி போன்ற நச்சுயிரிகள் வவ்வால் மூலம் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சார்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்விற்கு அமெரிக்க ராணுவம் பண உதவி செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த ஆய்வில் சுமார் 12 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின் முடிவில் வவ்வால்களை பிடித்து உண்ணும் பழக்கம் கொண்ட நாகலாந்து மக்களிடையே எபோலா, பில்லோ, ராபீஸ், சார்ஸ், மார்புர்க் ஆகிய நச்சுயிரிகளுக்கான எதிர்ப்புத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வின் மூலம், உலகளாவிய அளவில் பரவிவரும் பிலோ நச்சுயிரிக்கு இந்த வவ்வால்கள் தேங்கியிருந்த பரப்பிவிடும் இடமாக திகழ்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆய்வு 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சுமார் 85 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட வவ்வால் வேட்டையாடி உண்ணும் ஆண்கள்.

நன்றி PLOS

Share this Post:

தொடர்பான பதிவுகள்: