தமிழர் மக்கள் தொகை சுருங்குவதால் அழிந்து போகுமா தமிழ் பண்பாடு?

தமிழர் மக்கள் தொகை சுருங்குவதால் அழிந்து போகுமா தமிழ் பண்பாடு?

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பேராபத்தை ஆயிரம் ஆயிரம் பேர் கூடி அறிவுரை சொன்னார்கள் என்றால் இன்று தமிழர்கள் தமது எண்ணிக்கையில் அழிந்து போவதை சொல்வதற்கு யாரும் இல்லை என்பது வேதனையே!

இந்தி பேசும் மக்களிடையே மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டுக்கடங்காத அளவில் இன்றைய சூழலில் திகழ்கிறது என்றால் தமிழர்கள் சிறு குடும்பம் அமைப்பதால் மக்கள்தொகை சுருங்கி சுருங்கி 2041ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் எண்ணிக்கை வளர்வதை விட்டு விட்டு சிறுகச்சிறுக சுருங்கி அழிந்து போகும் நிலையை நோக்கிச் செல்லத் துவங்கும் என்ற ஆய்வு தகவல் வெளிவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் 2010 கணக்கெடுப்பின்படி 27 நாடுகளில் மக்கள்தொகை சுருங்கி வருவதாக கணக்கிட்டனர். 2050ஆம் ஆண்டு வாக்கில் 55 நாடுகளில் மக்கள்தொகை சுருங்க துவங்கும் என கணக்கிட்டுள்ளனர்.

அதேவேளையில் தமிழகத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 2041 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பதற்கு பதிலாக சுருங்க துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழர் பண்பாடும் தமிழ் மொழியும் அழிவதற்கான வாய்ப்புகள் பெருகும் என கருதப்படுகிறது.

கடந்த ஊழிகளில், தமிழர்கள் பெரும்பாலான உயர் பொறுப்புகளை இந்திய அரசிலும் பிற துறைகளிலும் கொண்டிருந்த நிலையில் அது மெல்ல மெல்ல தமிழர்களை விட்டு செல்லும் நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை சுருங்கிப் போகுமேயானால் அது இனத்தின் வீழ்ச்சியின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.

தமிழகத்தில் 2031 ஆம் ஆண்டு முதலே இளைஞர்களை காட்டிலும் வேலைக்கு செல்ல தகுதியிலா வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தமிழக பொருளாதார சூழலில் பெரும் தாக்கத்தை உண்டு செய்யும். அதாவது 2031 முதல் தமிழகத்தில் வேலைக்கு செல்வதற்கு வயது தகுதியுடையோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் துவங்கும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, குறிப்பாக சிற்றூர் பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்பொழுது குறைந்து வருவது இதன் எதிரொலிதான் என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாது போவதௌம் இதன் எதிரொலிதான் என்பதை நாம் இப்பொழுதே உணர வேண்டும்.

மக்கள்தொகை சுருக்கமானது பெண் விடுதலைக்கு வித்திடும் என சிலர் கருத்து கூறுகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: