சிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்?

சிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்?

சிறுவயது முதலே ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் சளி என மாறிமாறி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உடன் பிறந்தவர்களும் அல்லது அருகில் வாழ்பவர்களும் இத்தகைய தொல்லைகள் ஏதுமின்றி சிறப்பான உடல் நிலையுடன் வாழ்ந்து வருவார்கள். இத்தகைய வேறுபாடு எதனால் என பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இதற்கான முடிவு என்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிய ஆய்வின்படி முதன் முதலில் ஒருவருக்கு ஏற்படும் நச்சுயிரி தொற்றின் மரபணு தன்மையே அவருக்கு அடுத்தடுத்து ஏற்படும் நோய்த்தொற்று அளவை முடிவு செய்கிறது.

இந்த ஆய்வை அரிஸோனா பல்கலைக் கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகம் - லாஸ் ஏஞ்சல், அறிவியலாளர் சேர்ந்து மேற்கொண்டனர்.

இந்த ஆய்வானது "புதிய நோவல் கொரானா நச்சுயிரி தாக்குதல் 2019" குறித்து மேற்கொள்ளப்பட்டது.

சீனாவிற்கு பயணிப்பவர்களுக்கு இந்த நச்சுயிரி தொற்று ஏற்பட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் நச்சுயிரி தொற்றினால் உடல்நலம் பாதிக்கப் படாமல், அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டானல் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் அந்த நச்சுயிரி சுமந்து பிறருக்கு பரப்பி விடும் வாய்ப்பு உள்ளது.

ஆக, நச்சுயிரினால் ஒருவர் பாதிப்படைந்து உள்ளாரா என்பதை அறிகுறிகளை வைத்து மட்டும் ஆய்வு நடத்துவதால் எவ்வொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

இந்த ஆய்வின் படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருவோரை அறிகுறிகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தில்லாமல், அவர் பயணிக்கும் பிற இடங்களில் அவரை பின்தொடர்ந்து, அவரை சந்திக்கும் பிற நபர்களுக்கு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பெருமளவு மக்கள் வாழ்வதாலும் அங்கே மருத்துவ வசதிகள் சிறப்பாக இல்லாத நிலையில் இந்த நச்சுயிரிகள் வேகமாக பிற நாடுகளுக்கும் பரப்பப்படும் அச்சம் உள்ளதாக ஆய்வாளர் ஸ்மித் கூறுகிறார்.

இந்த ஆய்வு பல்லாண்டுகளாக விடை கிடைக்காமல் இருந்த பலவற்றுக்கு விடையை கொடுத்துள்ளது.

அதாவது ஒருவர் சிறுவயதிலேயே பறவை காய்ச்சல் போன்ற நோய் ஏற்படுத்தும் நச்சுயிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார் என்றால் அவர் இன்றைய சூழலில் பல வகையான நச்சுயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மையை தானே கொண்டிருப்பார் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், பெரும்பாலான மக்கள் இயற்கையாகவே பறவைக் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிர்ப்புத் தன்மையை கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது, பல ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு வவ்வால் பிடித்து தின்னும் பழக்கம் கொண்ட மக்கள் பலவகை நோய் எதிர்ப்புத் தன்மையை கொண்டிருந்தார்கள் என்பதாகும்.

நன்றி - ucla.edu

Share this Post:

தொடர்பான பதிவுகள்: