இரவில் ஞாயிறு ஒளியிலிருந்து மின்சாரம்

இரவில் ஞாயிறு ஒளியிலிருந்து மின்சாரம்

இரவில் ஞாயிறு ஒளி என்று சொன்னால் பலருக்கு அது நகைப்பாக தோன்றும்.  அதிலும் அந்த ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கிறோம் என்று சொன்னால் நம்புவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால் ஆய்வாளர்கள் தம் ஆய்வினால் 50 வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ஞாயிறு ஒளி வீசும் நேரத்தில், ஒரு சதுர மீட்டர் ஒளி மின்னழுத்த கலமானது 200 வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால் இரவு நேரத்தில் இந்த சிறப்பு ஒளி மின்னழுத்த கலத்தினால் 50 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.

இதை பேராசிரியர் ஜெரிமி முன்டே அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.  இவர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகம், டேவிஸ் -யில்  இணைந்துள்ளார்.

வழக்கமான ஒளி மின்னழுத்த கலமானது ஞாயிறு ஒளி வெப்பத்தை விட குறைவாக வெப்பம் கொண்டிருப்பதினால் ஒளியை உள்வாங்கி அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

இரவு நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதையே தலைகீழான நடைமுறைப்படுத்தி முயன்றுள்ளார்.

அதாவது இரவில் கலத்தை விட சுற்றுப்புறம் குளிர்வாக இருப்பதினால் கலத்திலுருந்து வெப்பத்தை வான்நோக்கி செலுத்தி, அதன் விளைவாக ஏற்படும் வெப்ப வேறுபாடு கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து காட்டியுள்ளார்.

முனைவர் முண்டே இதை விளக்கும் பொழுது, வான் பகுதி இரவில் குளிர்வாக இருப்பதினால் வெப்பமடைந்த ஒரு கலனை வான்நோக்கி காட்டும் பொழுது வான்நோக்கி வெப்பமானது செலுத்தப்படுகிறது. இதனால் அகச்சிவப்பு ஒளிக்கற்றைகள் வெளிப்படுகின்றன. அதனை கொண்டு மின் உற்பத்தி செய்ய இயலும்.

மேலும் இதுகுறித்து அவர் விளக்கிய பொழுது, பகல் நேரங்களிலும் இந்த கலவை கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதாவது ஞாயிறு ஒளி நோக்கி இதை வைக்காமல், நேரடி ஒளியிலிருந்து மறைத்து வைத்தால் இரவு பகல் என 24 மணி நேரமும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்றார்.

நன்றி University of California - Davis

Share this Post:

தொடர்பான பதிவுகள்: