செய்திகள்
செப்டம்பர் 15 வாக்கில் மீண்டும் தமிழ்நாட்டில் கொரோனா தோற்று உச்சம் தொடும்... தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலுக்கு நடைபயணமாக வர தடை: மாவட்ட ஆட்சியர் அடுத்த கிழமை (வாரம்) முதல் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஆக.5-இல் முதல்வா் தொடக்கி வைக்கிறாா பள்ளிகள் 85% வரை கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக சுப. வீரபாண்டியன் நியமனம்! அடிப்படை கட்டாய தேவைகளுக்காக நடக்கும் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை


கொரோனா நச்சுயிரியும், வவ்வால்களிடமிருந்து தொற்றும் பிற நோய்களும்

கொரோனா நச்சுயிரியும், வவ்வால்களிடமிருந்து தொற்றும் பிற நோய்களும்

நச்சுயிரி தாக்குதல்கள் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த நேரத்தில் ஆய்வாளர்கள் வவ்வால்களிடமிருந்து நச்சுயிரி தாக்குதல்கள் மிகக் கடுமையாக இருப்பது எதனால் என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

வவ்வால்களின் அனு திசுக்களை எடுத்து அதை ஆய்வு செய்து பார்த்தபோது அவைகளுக்கு இயற்கையாகவே நச்சுயிரி நோய் எதிர்ப்பு திறன் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நச்சுயிரி தாக்குதல் எத்தகையதாக எவ்வளவு வலுவாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு போராடும் நோய் எதிர்ப்புத் தன்மை வவ்வால்களிடம் இருப்பதும் அதனால் நச்சுயிரிகள் தம்மைத்தாமே மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய வலுவடைந்த நச்சுயிரிகள் மனித இனத்தை தாக்கும் பொழுது மனித இனத்திற்கு பேரிழப்பு ஏற்படுகிறது.

நிகழ்வு ஊழிகளில் வவ்வால்களிடமிருந்து நச்சுயிரி தொற்றுகளான கொரோனா, கோவிட் 19, சார்ஸ், எபோலா, மெர்ஸ், மார்புர்க் ஆகியவை மனித இனத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மனிதர்களிடம் ஏற்படும் நச்சுயிரி தொற்றுக்கு அடிப்படையாக விளங்கும் வவ்வால் இனத்தின் நோய் எதிர்ப்புத் தன்மையானது, நச்சுயிரி அழிப்பதாக முயற்சி செய்து அந்த நச்சுயிரியை தம் அணுக்களில் இருந்து வெளிவர செய்து கோடிக்கணக்கில் பல்கிப் பெருக வழிவகை செய்து விடுகிறது.

இத்தகைய நோய் எதிர்ப்பு செயல்பாடு வவ்வால்களை நச்சுயிரி தாக்குதலில் இருந்து காத்து வந்தாலும், அதனால் நச்சுயிரிகள் பல்கி பெருகுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.  இதனால்தான் வவ்வால்கள் நச்சுயிரி சேமிப்புக் கிடங்குகளாக் திகழ்கின்றன.

நச்சுயிரி தாக்குதல் பெருமளவு தொடுக்கப்படும் பொழுது வவ்வால்கள் தமது உமிழ்நீர், எச்சங்கள் மற்றும் சிறுநீர் வழியாகவும் வெளியேற்றுகின்றன.

இதனால் நச்சுயிரிகள் பல இடங்களுக்கு பரப்பப்படுகின்றன. இதனாலேயே வவ்வால்கள் நச்சுயிரிகளின் தங்கும் விடுதியாக கருதப்படுகின்றன.

வவ்வால்களால் இத்தகைய தன்மை மாறிய நச்சுயிரிகளால் ஏற்படு நோய்களில் இருந்து எதிர்ப்புத் தன்மையை அவை கொண்டிருந்தாலும் மனித இனத்தால் அத்தகைய தன்மை மாறிய நச்சுயிரி தாக்குதல்களை எதிர்கொள்ள இயலுவதில்லை.

பொதுவாக இதயத்துடிப்பு வேகமாக கொண்ட எலி வகைகள் வாழ்நாட்கள் குறைவாக இருக்கும்.  இதே வகையைச் சார்ந்த வவ்வால்கள் நீண்ட நெடிய ஆயுளை கொண்டிருப்பதற்கு அடிப்படை அவற்றின் நச்சுயிரி எதிர்ப்பு ஆற்றலே ஆகும். வவ்வால்கள் பொதுவில் 40 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.  ஆனால் பிற எலி இனங்கள் இரண்டாட்டிற்கும் குறைவே வாழ்கின்றன.

வவ்வால்களின் விரைவான நோய் எதிர்ப்பு செயல்திறனானது புதிது புதிதான வகைகளில் நச்சுயிரிகள் படைக்கின்றன.

ஆய்வாளர்கள் தமது ஆய்வின் மூலமாக வவ்வால்களிடம் இருந்து நேரடியாக மனிதனுக்கு நச்சுயிரி தொற்று ஏற்படுவது இல்லை என்றும் நடுவில் மற்றொரு விலங்கினம் செயல்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக எபோலா நச்சுயிரி தாக்குதல் குரங்குகளிடம் இருந்து மனிதனை தாக்கியது. மெர்ஸ் ஒட்டகங்கள் வாயிலாக மனிதனை தாக்கியது.  நிப்பா நச்சுயிரி பன்றிகள் வாயிலாக தாக்கியது.

நன்றி கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லே

Share this Post:

தொடர்பான பதிவுகள்: