எபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்

எபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்

கிளியோப்பிளாஸ்டோமா என்கிற மூளை புற்றுநோய் குணப்படுத்த இயலாததும், வந்துவிட்டால் மரணிப்பது உறுதி என்ற நிலையும் கொண்டது.

ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் இத்தகைய கொடூரமான மூளைப் புற்றுநோயை குணப்படுத்த எபோலா நச்சுயிரியின் சில தன்மைகளை பயன்படுத்த இயலும் என கண்டறிந்துள்ளனர்.

ஏல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தமது ஆய்வு அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளனர்.  அதில் எபோலா நச்சுயிரியின் சில தன்மைகளைக் கொண்டு இந்த கிளியோப்பிளாஸ்டோமா மூளை புற்று நோயை குணப்படுத்த இயலும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஏல் பல்கலைக்கழகத்தின் முனைவர் அந்தோனி எடுத்துரைக்கும் பொழுது, " சொன்னால் நம்ப மாட்டீர்கள், உலகின் மிகக் கொடூரமான நச்சுயிரி மிகக் கொடூரமான மூளை புற்று நோயை குணப்படுத்த உதவுகிறது என்பதை!!!"  என்றார்.

எபோலா நச்சுயிரியின் நோய் எதிர்ப்புத் தன்மையை முறியடிக்கும் செயல்திறனையும் மூளைப் புற்றுநோய் கட்டிகளின் வலிமை இன்மையையும் ஒன்றுக்கு ஒன்றாக பயன்படுத்தி புற்றுநோய்க் கட்டிகளை அழிக்க இயலும் என ஆய்வகத்தில் உறுதி செய்துள்ளனர்.

பொதுவில் புற்றுநோய்க் கட்டிகளை உண்டாக்கும் உயிரானது தமது வழக்கமான உயிரணு தன்மையை கொண்டிராமல் நோய் எதிர்ப்புத் தன்மை அற்ற மாற்று அமைப்புடைய உயிரணுக்களை கொண்டு அமைந்திருக்கும்.

இந்த நோய் எதிர்ப்புத் தன்மையற்ற புற்றுநோய் அணுக்களின் மீது எபோலா நச்சுயிரி போன்ற ஒன்றை செலுத்தினால் அவை அந்த புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கிறது.

இவர்கள் செலுத்தும் அந்த நச்சுயிரியானது, வழக்கமாக மனித இனத்தை தாக்கும் நச்சுயிரி தன்மையை கொண்டிராமல் புற்றுநோய் உண்டாக்கும் உயிர் அணுக்களை மட்டும் தாக்கி அழிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

மேலும் எபோலா நச்சுயிரியின் ஏழு மரபணுக்கள், மனிதனை அது தாக்கும் போது, நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருப்பதால் தான் மனித இனத்தின் பேரழிவாக இந்த நச்சுயிரி கருதப்படுகிறது.

இந்த ஏழு மரபணுக்களில் ஒன்றை மட்டும் கொண்ட எபோலா நச்சுயிரியை பயன்படுத்தி புற்றுநோய் அணுக்களை அழித்து காட்டியுள்ளனர்.

மேலும் விரைந்து பல்கிப் பெருகாத தன்மையும் இந்த நச்சுயிரி கொண்டிருப்பதால் இந்த பயன்பாட்டிற்கு பெருந்துணை புரிகிறது.

ஆய்வாளர்கள் இந்த நச்சுயிரி பயன்பாட்டுடன் சேர்த்து, அறுவை மருத்துவத்தையும் பயன்படுத்தினால், இன்றைய அளவில் குணப்படுத்த இயலாது என்று கருதப்படும் கிளியோப்பிளாஸ்டோமா போன்ற எத்தகைய புற்று நோய்களையும் குணப்படுத்த இயலும் என எடுத்துரைக்கின்றன.

நன்றி - ஏல் பல்கலைக்கழகம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: