35 லட்சம் ரூபாய்க்கு ஓசூரில் அல்வா வாங்கிய திருநெல்வேலிக்காரர்!

35 லட்சம் ரூபாய்க்கு ஓசூரில் அல்வா வாங்கிய திருநெல்வேலிக்காரர்!

ஆசை வைப்பதே தவறான மனநிலை என்று முனிவர்களும் பெரியவர்களும் சொல்லி வர பேராசை பிடித்து அலைபவர்கள் அல்லல் படுவது அன்றும் இன்றும் தொடர்கதையாகி வருகிறது.

உழைத்து பொருள் ஈட்டுவதற்கான சரியான வயது என்றால் 60 வயதிற்கு கீழ்... அதில் 33 வயது என்றால் மிக மிக சரியான வயது. இந்த 33 ஆவது வயதில் ஒருவர் மன பக்குவமும் உடல் வலிமையும் பெற்றிருப்பார்.

திருநெல்வேலி மாவட்டம் திரிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.  இவரது வயது 33.  தனக்கென்று ஒரு தொழில் நிறுவனம் அங்கே அமைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.

இவரை ஆதித்ய வர்மா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தொடர்புகொண்டு தங்கத்தை சந்தை விலையிலிருந்து கிராம் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கும் குறைவாக கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதற்காக அவரை திருநெல்வேலியிலிருந்து பணமாக எடுத்துக்கொண்டு தங்கம் வாங்க ஓசூருக்கு அழைத்துள்ளனர்.

அவரும் பேராசையுடன் 35 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஓசூருக்கு வந்துள்ளார்.  வந்தவரை வரவேற்பதில் வல்லவர்களான ஆதித்யா மற்றும் சந்தோஷ் அவரை அன்புடன் ஒரு காரில் ஏற்றி உள்ளனர்.

ஓசூரில் சீதாராம் மேடு பகுதியில் கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஒன்னல்வாடி என்கிற ஊர் நோக்கி பயணித்துள்ளது.

மனித நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் வைத்து அசோக்குமாரை நன்கு அடித்து புடைத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு அவரை சாலையில் தூக்கி எறிந்து சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த அசோக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பணத்தை மீட்டுத் தருமாறு தற்பொழுது ஓசூர் நகர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

ஓசூர் பையன்:  அல்வாவுக்கு புகழ்பெற்ற இடம் திருநெல்வேலி தானே!!! அப்புறம் எதற்காக அவர் ஓசூர் வந்தார்?

Share this Post:

தொடர்பான பதிவுகள்: