செய்திகள்
3 சிலிண்டர், பஸ் பயணம் இலவசம்... பெண்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்த பிரியங்கா காந்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி சிறப்புப் பஸ்கள் இயங்க தொடங்கின ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ! திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்

ரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்

2016ஆம் ஆண்டு வாக்கில் மோடி அரசு அதிரடியாக அன்றைய சூழலில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.

அதன் தாக்கம் இன்றளவும் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தி நிற்க, தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்படும் சூழலுக்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் கூடுதலான தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) செயல்பாட்டில் உள்ளன.

இந்த இயந்திரங்கள் மூலம் பேரூர்களில் மட்டும் தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது எல்லா இயந்திரங்களும் நான்கு அறைகள் கொண்டு 2000, 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன.

நடுவன் அரசின் சுற்றறிக்கையின் படி, தானியங்கி பணம் வழங்கி இயந்திரங்கள் 2000 ரூபாய் நோட்டை இனி வழங்காது.  அதனால் 2000 ரூபாய் அறை எல்லா தானியங்கி இயந்திரங்களில் இருந்தும் அகற்றப்படும்.

வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு வழங்குவதை மெல்லமெல்ல நிறுத்திவிடும்.

2017 ஆம் நிதி ஆண்டின் அறிக்கையின்படி, நாட்டில் பணப் புழக்கத்தில், 51 விழுக்காடு 2000 ரூபாய் நோட்டுக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

அதுவே 2019 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் பெரும்பாலும் குறைக்கப்பட்டு, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருவாரியாக மாறி, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 50 விழுக்காடாக நிலைகொண்டது.

இது குறித்து ஓசூர்ஆன்லைன்.com சார்பில் பணம் நிரப்பும் நிறுவனங்களிடம் வினவியபோது, "2000 ரூபாய் நோட்டு குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை" என்று கூறுகின்றனர்.

வங்கி அலுவலரை ஓசூர்ஆன்லைன்.com தொடர்புகொண்டு வினவியபோது, "2000 ரூபாய் நோட்டு பணம், 100 - 500 செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் விரைந்து அதை ஈடு செய்வதற்காக அச்சடிக்கப்பட்டவை.  இன்று பணப் புழக்கம் வளக்கமான நிலையை எட்டிவிட்ட நிலையில் 2000 ரூபாய் தேவை இல்லை" என்றார்

இலக்கமுறை பண பரிமாற்றத்தை விரும்பும் நடுவன் அரசு 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கட்டுப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறது.

வங்கித் துறையை நன்கறிந்த அலுவலரை இது தொடர்பில் ஓசூர்ஆன்லைன்.com  தொடர்புகொண்டு வினவியபோது,  "2000 ரூபாய்குப் பதிலாக குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய்களை மாற்றி தானியங்கி இயந்திரங்களில் வைத்தால் அதனால் மக்கள் பெருமளவு சிறு மதிப்பு ரூபாய்களை எடுக்கும் நிலை ஏற்படும்.

இதனால் வங்கிகள் அடிக்கடி பணத்தை அடுக்க ஆட்களை அனுப்ப வேண்டி வரும்.  இது தொடர்பில் வங்கிகள் பெருமளவு செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்" என்று கூறினார்.

நடுவன் அரசு 2000 ரூபாய் செல்லாது என்று பொதுவில் அறிவிக்காமல் நிதானமான முறையில், வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் மறுசுழற்சி செய்யாமல், அதன் பயன்பாட்டை நிறுத்துகிறது.

ஓசூர் பையன்:  வீட்டில் 2000 ரூபாய் வைத்திருந்தால் முதல் வேலையாக அதை வங்கியில் செலுத்தி விடுங்கள்.  நேரத்தை வீணடித்து விட்டு அழுது பயனில்லை.

முடிந்தவரை இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் என அனைவருக்கும் பகிருங்கள்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: