இந்தக் கோடை தமிழகத்தில் கொடூரமாக இருக்காது

இந்தக் கோடை தமிழகத்தில் கொடூரமாக இருக்காது

தமிழகத்திற்கு ஒரு மகிழ்வான செய்தி என்னவென்றால் இந்த கோடை ஊழி வழக்கமான வெப்பநிலையை விட கொடூரமான வெப்பத்தை தராது. 

இந்திய வானிலை நடுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் கோடையில் வழக்கமான வெப்பநிலையை கொண்டிருக்கும் என்ற மகிழ்வான செய்தியை வெளியிட்டிருக்கிறது. 

அதில் தமிழகத்தைப் பொருத்தவரை வெப்பமானது வழக்கமான கோடை வெப்ப நிலையைவிட 0.5 செல்சியஸ் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகல்நேர வெப்பமானது டெல்லி, ஜம்மு, காஷ்மீர், அரியானா, சண்டிகர், மேற்கு உத்திரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், சட்டிஸ்கர், ஒடிசா, இமய தொடரின் மேற்குவங்க பகுதிகள், குஜராத்தின் சௌராஷ்ட்ரா, கட்சி பகுதிகள், கோவா, மகாராஷ்டிராவின் நடுப்பகுதி, கர்நாடகாவின் கடற்கரை பகுதி மற்றும் கேரளாவில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக இருக்கும். 

அடுத்து வரும் மழை ஊழியை பொறுத்தவரை, பசுபிக் பெருங்கடலில் சில ஆண்டுகளில் ஏற்படும் எல் நினோ என்கிற வெப்ப மாற்று தன்மையானது இந்த ஆண்டு ஏற்படாமல், வழக்கமான மழைப்பொழிவை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும் ஏப்ரல் நடுப்பகுதியில் தெளிவான ஆய்வுத் தகவல் கிடைக்கப் பெறும். 

கடந்தாண்டு மழைப்பொழிவை பொருத்தவரை, தென்மேற்கு பருவமழை யானது அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்த மழையின் அளவு வழக்கத்தை விட 10 விழுக்காடு கூடுதலாக இருந்தது.  இது கடந்த 25 ஆண்டுகளில் கூடுதலான மழைப்பொழிவு என கருதப்படுகிறது. 

இதற்குமுன் 1994ஆம் ஆண்டு 110 விழுக்காடு கூடுதலாக மழை பொழிந்து உள்ளது. 

நீர் சேமிப்பை பொருத்தவரை அணைக்கட்டுகளில் பிப்ரவரி 20ஆம் நாள் கணக்கீட்டின்படி 101.87 பில்லியன் கன மீட்டர் நீர் சேமிப்பு உள்ளது இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 54 விழுக்காடு கூடுதல் ஆகும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: