இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது

கையூட்டு குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் என அறியப்பட்ட இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மென்பொருள் வடிவமைப்பு தொழில் புரிவோர் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை வழிபடுவோரின் அனைத்து தகவல்களையும் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து வாய்ப்புகளை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் மூலமாக அவர்களது மென்பொருள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

வருமான வரித்துறையின் செயலாக்க நடுவத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இத்தகைய நிலையில் கட்டிய வரியை முறையாக கணக்கு காட்டி விரைவாக திரும்பப்பெற பலரும் முயன்று வருகின்றனர்.

பெருமளவு வருமான வரியாக பணம் செலுத்திய சிலர் தமது பணத்தை விரைவாக திரும்பப்பெற இந்த இன்போசிஸ் ஊழியர்கள் மூலம் முறைகேடான வழிமுறைகளைப் பின்பற்றி முயன்றுள்ளனர்.

இதற்காக இந்த ஊழியர்கள் 4 விழுக்காடு அளவிற்கு தரகு பணமாக பெற்றுள்ளனர்.  அவர்கள் பணிபுரிந்த சில நாட்களிலேயே 15 லட்சம் ரூபாய் அளவிற்கான பணத்தை கையூட்டாக அவர்கள் பெற்றிருக்கலாம் என அறியப்படுகிறது.

வரி பணத்தை விரைவாக திரும்ப பெற்றவர்கள் பெரும்பாலானோர் அமைதியாக இருந்துவிட ஒருவர் மட்டும் பணத்தையும் பெற்றுக் கொண்டு இந்த ஊழியர்களுடனான தனது தொலைபேசி உரையாடலை வருமான வரித்துறையினர் இடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

வரியை திரும்பப் பெற முயலும் வாடிக்கையாளர்களை நட்பு வட்டாரத்தின் மூலமாக இந்த ஊழியர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

வருமான வரித் துறையினரின் புகாரை தொடர்ந்து பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய காவலர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று இன்போசிஸ் ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: