தங்களது தொழிற்சாலை இலக்கமுறை உற்பத்தி முறைக்கு ஏற்புடையதா?

தங்களது தொழிற்சாலை இலக்கமுறை உற்பத்தி முறைக்கு ஏற்புடையதா?

தொழிற்சாலை உற்பத்தி முறைகள் தொடர்ந்து மின்னணுவியல் நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.  இதனால் கிடைக்கும் பயன், இருக்கின்ற இயந்திரங்களில் இருந்து திறம்பட உற்பத்தி பெறுவது.

மேலும், தொழிலாளர்கள் மேலாண்மையை பல அடுக்கு கொண்டிராமல் தானியங்கி கருவிகள் மூலம் புள்ளிவிபரங்களை பெற்று திறன்மிக்க மேலாளர்களை கொண்டு சிறப்புடன் மனித வளத்தை தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவது.

சந்தை நிலவரம், உற்பத்தித் திறன் மற்றும் பிற தகவல் புள்ளி விவரங்களைத் திரட்டி, அவற்றைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதால், உற்பத்திக்கான திட்டத்தை வகுப்பதன் மூலம் தொழிற்சாலைகள் திறம்பட செயலாற்ற இயலும்.

ஐ.ஓ.டி என்றழைக்கப்படுகிற "இணையத்தில் இணைந்து கருவி" களின் துணை கொண்டு, தொழிற்சாலை இயந்திரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டால், முதல் அடுக்கு மேற்பார்வையாளர் பணிகளை அதுவே மேற்கொண்டு செலவினங்களை பெருமளவில் குறைத்து விடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரமானது எவ்வளவு மணி நேரங்கள் தொடர்ந்து இயங்கி உள்ளது, எவ்வளவு மின்சாரத்தை எடுத்துள்ளது, எவ்வளவு நேரங்கள் எந்தெந்த பொத்தான்கள் செயல்பாட்டிற்காக பணியாளரால் இயக்கப்பட்டன, இயந்திரமானது வெற்றாக ஓடியதா அல்லது உற்பத்திக்காக ஓடியதா, பணியாளர் எவ்வளவு மணி நேரங்கள் இயந்திரத்தின் அருகிலிருந்து இயந்திரத்தை இயக்கினார் போன்ற புள்ளி விவரங்கள் இந்த பொறி கருவி மூலம் பெறலாம்.

மேலும், கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரமாக இருப்பின், அவற்றில் புதிய பொருள் உற்பத்திக்கான மென்பொருள் நிரல்களை பதிவேற்றுவதற்கு தனியாக நபர்களை வேலைக்கு அமர்த்தாமல் தொலைவிலிருந்தே அத்தகைய கணிப்பொறி நிரல்களை பதிவேற்றலாம்.

எடுத்துக்காட்டாக, கணிப்பொறி துணை கொண்ட தகடு மடிப்பு இயந்திரம் கொண்ட தொழிற்சாலையில் இணையத்தில் இணைக்கப்பட்ட பொறி கருவியை இணைப்பதன் மூலம், புதிய பொருள் உற்பத்தி செய்வதென்றால் அதற்கான மென்பொறி நிரல்களை, தொலைவிலிருந்தே பதிவேற்றி விடலாம். 

இதனால், நிரல்களை பதிவு ஏற்றுவதற்காக ஒருவர் இயந்திரத்தின் அருகே செல்ல வேண்டிய தேவை இருக்காது.  மேலும் ஒரே நேரத்தில் ஆயிரம் இயந்திரங்கள் இருந்தாலும் அவற்றிலெல்லாம் ஒரு சொடுக்கில் நிரல்களை மாற்றி அமைக்கலாம்.

தொழிலாளர் புதிய பொருள் குறித்து கற்பதற்காக, இயந்திரத்தின் அருகில் அவர் எப்படியெல்லாம் தகடை ஒன்றை முடித்து விட்டு அடுத்து எப்படி மடிக்க வேண்டும் என்பது குறித்தான தகவலை முப்பரிமான படமாக இயந்திரத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள காட்சியகத்தில் இவர் செய்கின்ற செயல் முடிக்கப்பட்டது என்பதை ஒரு கருவி உணர்ந்து அடுத்தடுத்த தகவல்களை தரும்.

இதனால், தொழிலாளருக்கு ஒருவர் அருகில் இருந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கற்பிப்பிப்பது தேவையற்றதாக மாறிவிடுகிறது.  ஏனெனில் இயந்திரத்தின் அருகில் இருக்கும் காட்சியகம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டி விடுகிறது.

மேலும், உற்பத்தியாகும் பொருள், உற்பத்தி ஆக்கப் படவேண்டிய பொருளுக்கு ஒத்து இருக்கிறதா என்பதை காட்சியகத்தில் வரும் படம் தெளிவாக தொழிலாளருக்கு கற்றுக் கொடுத்துவிடும். இதனால், குறைபாடுள்ள பொருள் உற்பத்தி பெருமளவில் தவிர்க்கப்படும்.

தொழிலாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தி இலக்கு அடைவதற்காக குறைபாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்ய இயலாத வாரு இத்தகைய தொடர் கண்காணிப்பு கருவிகள் கட்டுப்படுத்தும்.

உற்பத்தி இயந்திரம் உற்பத்திக்காக மட்டுமே ஓடுகிறதா என்பது குறித்த புள்ளிவிவரங்கள் பெரப்படுவதால் மின்சேமிப்பு பெருமளவில் ஏற்படும்.

தொடர்ந்து புள்ளிவிபரங்கள் பெற்றுக் கொண்டே இருப்பதால் அதில் நடத்தப்படும் ஆய்வானது தொழிற்சாலை மேலும் திறம்பட செயல்படுவதற்கு வழிவகை செய்யும்.

நன்றி -  ChattingBirds.Com

Share this Post:

தொடர்பான பதிவுகள்: