கொராணா நச்சுயிரி தாக்குதலை பயன்படுத்தும் இணைய ஊடுருவிகள்

கொராணா நச்சுயிரி தாக்குதலை பயன்படுத்தும் இணைய ஊடுருவிகள்

உலகளாவிய அளவில் கொராணா நச்சுயிரி  தாக்குதலால் மக்கள் அனைவரும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் இந்த நேரத்தில், இந்த மக்களிடையேயான அச்சத்தை கொள்ளை அடிப்பதற்கும் முடிச்சவிக்கித்தனம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இணைய ஊடுருவலாளர்கள் களத்தில் இறங்கி இருப்பது இணைய பாதுகாப்பு வழங்குபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா நச்சுயிரியின் தகவல்களை பயன்படுத்தி நச்சுநிரல்களை மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக பதிவுகள் மூலமாக பரப்பி வருகின்றனர்.  

இதன் வாயிலாக கணினி, கைபேசிகள் மற்றும் இணைய இணைப்புகளிடையே புகுந்து தகவல்களை திருடி அதன்மூலம் வங்கிகளில் இருந்து பெருமளவு பணத்தை திருடுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.

பொதுவாக கணினிகளில் நச்சுநிரல் தாக்காத வண்ணம் மென்பொருட்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  ஆனால் கணினி, கைபேசி மற்றும் இணையத்துடன் இணைந்த கருவிகள், இணையத்துடன் இணைக்கும் ரவுடர் போன்ற கருவிகளின் மென்பொருள் மேம்படுத்துதல் என்பது பலரும் மேற்கொள்ளாத செயலாக இருந்து வருகிறது.  இதனால் இணைய ஊடுருவல் தாக்குதலுக்கு உள்ளாக பெரும் வாய்ப்பு உள்ளது.

ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் ஒரு இணைய இணைப்பு கருவி மூலம் இணையத்தை பயன்படுத்துவதன் வாயிலாக பலவகையான ஊடுருவல் தாக்குதல்களுக்கு அந்த கருவியை வெளிப்படுத்த ஏதுவாகிறது.

அதாவது, முதலில் பயனரின் கருவியை தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்தி தரும் ரவுட்டர் கருவிகளை ஊடுருவுகின்றன. அதன்மூலம் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் ஊடுருவுதலுக்கு உள்ளாகிறது.

ஊடுருவபட்ட கருவியானது ஊடுருவிய நிறுவனத்தை மட்டுமே தாக்க பயன்படவேண்டும் என்பதல்ல.  அதை ஒரு எந்திர கருவியாக (பாட்) பயன்படுத்தி அருகில் உள்ள பிற இணைய இணைப்புகளின் மீது தாக்குதல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

இணையத்துடன் இணைந்த கருவிகள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அல்லது இத்தகைய ஊடுருவல்களுக்கு  பயன்படும் பொழுது தாக்குதல் எங்கிருந்து தொடுக்கப்படுகிறது என்பதை கண்டறிவதில் சிக்கல் மிக்கதாக அமையும்.

பொதுவாக இந்தத் தாக்குதலின் துவக்கம் பயனருக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் ஊடுருவல் துவக்குகிறார்.

மின்னஞ்சலின் முதல் தகவலானது கொரானா நச்சுயிரி குறித்து இருப்பதால், பெரும்பாலான பயனர்கள் அத்தகைய மின்னஞ்சலை திறக்க முயல்கின்றனர்.  மின்னஞ்சல் திறக்கப்பட்ட உடன் அந்த கணிப்பொறிகளில் நச்சுநிரல் ஏற்றப்பட்டு ஊடுருவலுக்கு ஏற்பதாக அமைகிறது.

சில மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கானவர்கள் நச்சுயிரி தாக்குதலுக்கு பலி என்றும் அதற்கு நன்கொடை வேண்டி விண்ணப்பிப்பது போலவும் வருகிறது.

நன்கொடை தரும் நல் உள்ளத்துடன் இணைப்பைச் சொடுக்கினால் அது நச்சுநிரலை பதிவிரக்கி விடுகிறது.

பொதுவாக இந்த இணைப்புகளின் இணைப்புகள்  

corona_health_update.pdf (attributed to centres for disease control),
origin-of-corona_cnn.mp4,
covid19_mandatory_work_from_measures.pdf,
corona_safety_alert.docx
secondary_corona_infections.pdf

என்ற வகையில் இருக்கின்றன.

மின்னஞ்சல்களையோ அல்லது வாட்ஸ் அப் செயலி மூலமாக வரும் தகவல்களையோ முன்பின் அறியாதவர்களிடமிருந்து வந்தால் எச்சரிக்கையுடன் அதை கையாள்வது நம்மை பாதுகாக்கும்.


நன்றி:  Brunel University, London

Share this Post:

தொடர்பான பதிவுகள்: