இந்திய - பாகிஸ்தான் பகையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்?

இந்திய - பாகிஸ்தான் பகையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்?

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரே நாடாக இருந்த இந்தியா - பாகிஸ்தான், பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைக்குப்பின் பிரிவினையின் பொழுது இரு நாடுகளாக பிரிந்து விட்டதால், இன்று நிரந்தர பகைவர்களாக இரண்டு நாடுகளும் திகழ்ந்து வருகின்றன.

இரண்டு நாடுகளுமே ஏழை நாடுகள் என்றாலும், அவை இரண்டும் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகள் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் இவர்களின் சண்டை சச்சரவுகளில் அவ்வப்பொழுது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தி வருகின்றன.

வளர்ந்த நாடுகள் பல, அமெரிக்கா உட்பட பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த பகைவர்கள் அமைதியாக இருப்பதற்கு என்று செலவு செய்து வருகிறது.

எதனால் இந்த அச்சம்?  இவர்கள் இருவரும் சண்டையிட்டு மடிந்தால் உலக நாடுகளுக்கு என்ன வந்துவிடப்போகிறது?  இந்த கேள்வியுடன் சற்று ஆராய்ந்து பார்ப்போமேயானால் அதற்கான விடை தெரிந்துவிடும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய நாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் கல்வி நிறுவனமானது இது தொடர்பில் தமது ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

உலக அளவில் அணுகுண்டை 95 விழுக்காடு அளவிற்கு வைத்திருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும்.  மீதமுள்ள 5 விழுக்காடு அளவிற்கான அணுகுண்டுகள் மட்டுமே பிற நாடுகளில் உள்ளன.  இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 150 அணுகுண்டுகளை தமது கட்டுப்பாட்டில் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக அறியப்படுகிறது.

அமெரிக்கா - ரஷ்யா இடையேயான சண்டை உலகத்தை முழுமையாக அழித்து விடும் என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை உலகத்தைப் பட்டினியில் ஆழ்த்திவிடும் என்கிறது ஆய்வின் முடிவு.

இரண்டு நாடுகளும் ஜப்பானின் ஹிரோஷிமா அழிப்பதற்கு பயன்பட்ட திறனில் தலா ஐம்பது அணுகுண்டுகளை ஒன்றன்மீது ஒன்று போட்டால், உலக அளவில் உணவுத் தட்டுப்பாட்டை அது பத்து ஆண்டுகளுக்கு ஏற்படுத்தும்.  அதனால் மனித இனம் பெரும் அழிவை சந்திக்கும் என ஆய்வின் முடிவு எடுத்துக் கூறுகிறது.

குண்டு வீச்சுகளானது பெரும் தூசி படலத்தை வளிமண்டலத்தில் ஏற்படுத்தி, அதனால் நீண்ட ஒரு திடீர் குளிர் ஊழி ஏற்படும் என்றும், இதனால் மக்காச்சோளம், அரிசி, கோதுமை மற்றும் சோயா அவரை ஆகியவற்றின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறிதளவு இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டாலும் அதன் விளைவாக வெப்ப மாற்றம் ஏற்பட்டு புவியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நாசாவின் முனைவர் ஜோனஸ் அவர்கள்.

உணவு உற்பத்தி பாதிப்பானது இந்தியா - பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பெருமளவில் பாதிக்கும்.

பொதுவாக வட துருவப் பகுதியில் உள்ள நாடுகள் சற்று செல்வச் செழிப்புடன் திகழ்கிறது.  ஆனால் தென் துருவப் பகுதிகளில் உள்ள நாடுகள் பெரும்பாலும் அதாவது 70 விழுக்காடு அளவிற்கு ஏழ்மை நாடுகளாக திகழ்கின்றன.

தென் துருவப் பகுதியில் 1.3 மில்லியன் மக்கள் தொகை வாழ்கின்றனர். அவர்களிடையே ஏற்கனவே உணவுத் தட்டுப்பாடு இருந்து வருகிறது.  

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு குண்டைக் கொண்டு சண்டை மேற்கொண்டால் அதனால் தென் துருவப் பகுதியில் 20 விழுக்காடு அளவிற்கு உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆய்வின் படி அமெரிக்க நாடுகளில் 20 விழுக்காடு அளவிற்கு உணவு உற்பத்தி குறைவும் என்றால் ரஷ்யாவில் 50 விழுக்காடு அளவிற்கு உற்பத்தி குறைவு ஏற்படும்.

வளர்ந்த நாடுகள் பல பிற நாடுகளுக்கு தமது உணவு உற்பத்தியை ஏற்றுமதி செய்து வருகின்றன.  அப்படியானால் வளர்ந்துவிட்ட நாடுகளில் ஏற்படும் உணவு உற்பத்தி குறைபாடு என்பது உணவு தேவை உள்ள நாடுகளுக்கு உணவு கிடைக்காமல் செய்துவிடும்.

இது பெரும் பஞ்சம் பட்டினியை மக்களிடையே ஏற்படுத்தி பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாக வழிவகுக்கும்.

இரு நாடுகளும் சிறிய அளவில் அடுத்து அணு போர் புரிந்தாலும், 10 ஆண்டுகளுக்கு உலக அளவில் மனித இனத்திடம் பாதிப்பை ஏற்படுத்தும்.  முதல் ஐந்து ஆண்டுகள் கடும் பாதிப்பும், அடுத்த 5 ஆண்டுகளில் மனித இனத்தினிடையே ஒரு குழப்பமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.

புவி வெப்பமடைதல் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாலும் திடீரென ஒரு பானி பூரி ஏற்படுமேயானால் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களை அழித்துவிடும்.

இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் முழு அளவிலான போர் புரிந்துள்ளனர்.

இந்தியா 1974 ஆம் ஆண்டு தனது அணு திறனை ஆய்வு செய்து உலகிற்குக் காட்டியது.  பாகிஸ்தான் 1998 ஆம் ஆண்டு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதாக உலகிற்கு காட்டியது.

தற்போது இந்தியாவில் நிலவும் இந்துத்துவா அரசியலும், அதனால் இஸ்லாமியர்கள், குறிப்பாக உருது பேசும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவதும் இரு நாடுகளுக்கு இடையே மேலும் பகையை ஏற்படுத்தும் என உலக நாடுகள் எச்சரிக்கின்றன.

நன்றி - கொலம்பியா பல்கலை கழத்தின் கிழத்திய் ஆய்வு நிறுவனம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: