கருத்தரித்த பெண் பழங்கள் உண்ணுவதால் குழந்தையின் அறிவாற்றல் உயருமா?

கருத்தரித்த பெண் பழங்கள் உண்ணுவதால் குழந்தையின் அறிவாற்றல் உயருமா?

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கருவுற்ற பெண்கள் பழக்கூழ் குடித்தால், வளரும் குழந்தை அறிவாற்றல் மிக்கதாக வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கருவுற்ற பெண் பழங்களை உண்ணுவது குழந்தையின் அறிவாற்றலை உயர்த்துகிறது என்ற ஆய்வு கருத்து வெளியிடப்பட்டது.

இதுதொடர்பில், அதன்பின் பெரிய அளவிலான எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்பொழுது ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை மேலும் உறுதி செய்கிறது.

இந்த புதிய ஆய்வின்படி, கருவுற்ற பெண், குழந்தையை வயிற்றில் சுமக்கும் நேரத்தில் உண்ணும் பழங்களினால், குழந்தை பிறந்து சுமார் ஓராண்டு வரை அதன் அறிவாற்றல் சிறப்புடன் வளர துணைபுரிகிறது.

பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ அறிவியல் பிரிவு முனைவர் கிளாரி கவுசோ கூறுகையில் "பழங்கள் உண்ணுவதால் மட்டுமே குழந்தையின் அறிவாற்றல் உயர்கிறது என உறுதிபடக் கூற இயலாது.  ஆனால் பழங்கள் உண்ணுவது குழந்தையின் அறிவாற்றல் உயர்த்துவதற்கு துணைபுரிகிறது" என்றார்.

இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக பாலூட்டி மாதிரி ஒன்று பயன்படுத்தப்பட்டது.

ஆய்வின்படி, குழந்தை கருவுற்ற நேரத்தில் பெண் பழங்கள் உண்ணுவதால் குழந்தையின் அறிவாற்றல் வளருகிறது.  இதனால் மருத்துவம் சார்ந்த அல்லது பிற உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் அறிவாற்றலை பக்க விளைவு கொண்டு ஏற்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் பழ வகைகளை உண்ணுவதால் அதே அளவிற்கான குழந்தை அறிவாற்றல் வளர்ச்சி ஏற்படுகிறது.

மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கருவுற்ற பெண்ணிற்கு பழச்சாறுகளை உணவாக வழங்கும் பொழுது, பிறந்த குழந்தையின் நினைவாற்றல் பெருமளவில் உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு பெண்ணும் தான் பெற்றெடுக்கும் குழந்தை உலகம் போற்றும் மனிதராக வடிவெடுக்க வேண்டும் என விரும்பும் இந்த வேளையில், பழங்களுடன் சேர்த்து தேவையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக பிறக்கும் குழந்தை அறிவாற்றலுடன் பிறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.

இந்த மாதிரி ஆய்வு முடிவானது, எலிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டதன் முடிவு ஆகும்.

நன்றி - ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்Share this Post:

தொடர்பான பதிவுகள்: