செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் நிலம் வாங்க நடந்த முறைகேடு தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைமைக்கும் - அனைத்திந்திய பாஜக தலைமைக்கும் மோதல்போக்கான சலசலப்பு ஏற்பட்டுள்ளது... பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய உழவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி


திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு இயற்கை எய்தினார்

திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு இயற்கை எய்தினார்

சிறு நீரக பாதிப்பினால் அல்லல்பட்டு மருத்துவத்தில் இருந்த விசு தனது 74 ஆவது வயதில் 22.03.2020 அன்று மாலை இயற்கை எய்தினார்.  

மறைந்த விசுவிற்கு உமா என்ற மனைவியும், லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர்.

இன்று - திங்கள் கிழமை 23.03.2020 மாலை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது.

நடிகர் விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

விசு நடித்து இயக்கி 1992-ல் வெளியான ‘நீங்க நல்லா இருக்கணும்’ படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது..

சிவகுமார் நடித்த அவன் அவள் அது, ரஜினிகாந்தின் தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

கடைசியாக 2013-ம் ஆண்டு வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் விசு, நடித்திருந்தார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: